திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறையை சேர்ந்த சலூன் கடைகாரர் ஒருவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதற்கு “கபாலி” என்று பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார். செல்ல நாய் கபாலி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்களிடம் மிகுந்த பாசத்துடனும், நன்றியுடனும் பழகி வந்தது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று முன்தினம் (24-ந்தேதி) நாய் கபாலி இறந்தது. கபாலியின் மரணத்தால் சலூன் கடைக்காரர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆசை ஆசையாக குழந்தையை போல பாவித்து வளர்த்த செல்ல நாய் கபாலியின் மறைவு அவர்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியது.
இதனால் செல்ல நாய் கபாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திருச்சி நகரெங்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஓட்டியுள்ளனர். அதில் செல்ல நாய் கபாலி மறைவுக்கு அஞ்சலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தோற்றம் 1994 என்றும் மறைவு 24.5.11 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 17 வருடங்களாக செல்ல நாய் கபாலியை வளர்த்ததால் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்து போஸ்டர் ஓட்டியது தெரிய வந்தது. நன்றியுள்ள பிராணியான கபாலி நாயின் நன்றி தன்மையை மறந்து விடாமல் சலூன் கடைக்காரர் குடும்பத்தினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஓட்டியது திருச்சி மக்களை மிகவும் நெகிழ செய்துள்ளது.

No comments:
Post a Comment