Sunday, May 1, 2011

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி ; டிராவல்ஸ் நிறுவனம் மீது போலீசில் புகார்.

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி;    நாகர். டிராவல்ஸ் நிறுவனம் மீது போலீசில் புகார்

நாகர்கோவில் பகுதியில் செயல்படும் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து அரபு நாடு களுக்கும், இந்தோ னேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கும் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்து அனுப்பப்படுவர் என்று அந்த நிறுவனத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் இந்த நிறுவனத்தில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரும் இங்கு வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

இன்று காலையில் இந்த டிராவல்ஸ் நிறுவனம் முன்பு ஏராளமானோர் கூடி நின் றனர். அவர்கள் நிறுவனத்தின் கதவுகளை உடைக்க முயன்றதோடு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் நேசமணி நகர் போலீசார் அங்கு விரைந்துச் சென்றனர். அவர்களிடம் அங்கிருந்தவர்கள் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தியவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் கூறினர்.

இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது நெல்லை மாவட்டம் வள்ளி யூரைச் சேர்ந்த இசக்கித்துரை என்பவர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் பார்வதி புரத்தில் இயங்கி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் அரபு நாட்டில் கட்டிட வேலைக்கு சென்றேன். மாதம் ரூ. 18 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியிருந்தனர். அங்கு சென்ற பின்பு எனக்கு ரூ. 7 ஆயிரம் மட்டுமே சம்பளம் தரப்பட்டது. இதனால் நான் அங்கிருந்து திரும்பி வந்து விட்டேன். இதற்காக நான் பெரிதும் கஷ்டப்பட்டேன். என்னை ஏமாற்றி வெளி நாட்டுக்கு அனுப்பி விட்ட டிராவல்ஸ் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக டிராவல்ஸ் நிறுவனம் வாங்கிய பணத்தை திருப்பி தர வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது போல அங்கு திரண்டு நின்ற பலரும் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கும் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை பணம் வாங்கினார்கள். ஆனால் இதுவரை எங்களை வெளிநாட்டுக்கு அனுப்ப வில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. சிலருக்கு போலி விசா கொடுத்தும் ஏமாற்றி இருக்கிறார்கள். தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக் கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் பலரது பள்ளி மற்றும் கல்லூரி ஒரிஜினல் சான்றிதழ்களையும், ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ், ஒரிஜினல் பாஸ்போர்ட் ஆகியவற்றையும் டிராவல்ஸ் நிறுவனத்தார் வாங்கி வைத்துக் கொண்டனர். இதனால் எங்களுக்கு வேறு கம்பெனிகள் மூலமும் வேலைக்கு செல்ல இயல வில்லை. கடந்த சில நாட்களாக நிறுவனம் திறக்கப்பட வில்லை.

அதன் நிர்வாகிகளையும் காணவில்லை. எனவே தான் போலீசில் புகார் கொடுக்க வந்தோம். இனி போலீசார் தான் டிராவல்ஸ் நிர்வாகிகளை கண்டு பிடித்து எங்களது பணம் மற்றும் சான்றிதழ்களை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர்கள் போலீ சாரிடம் புகார் கூறினர்.

No comments: