Sunday, May 1, 2011

கோடை விடுமுறையையொட்டி கூட்டம் அலை மோதல் : திருப்பதியில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.

கோடை விடுமுறையையொட்டி கூட்டம் அலை மோதல்: திருப்பதியில் 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

தற்போது மே மாத கோடை விடுமுறையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுறைவிடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் திருப்பதியில் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளிக்கிறார்கள்.

பக்தர்கள் கூட்டத்தையொட்டி வைகுண்டம் காம்ப்ளக்ஸ்சில் உள்ள அறைகள் நிரம்பி வழிகிறது. 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். ரூ.300 டிக்கெட் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருக்கிறார்கள்.

நேற்று லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தங்குவதற்கு அறை இல்லாமல் கோவில் வளாகம், மரத்தடியில் பக்தர்கள் தங்கியுள்ளனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்துள்ளனர்.

No comments: