Sunday, May 1, 2011

12 லட்சம் மாணவர்கள் எழுதும் பொறியியல் நுழைவுத்தேர்வு வினாத்தாள் 'அவுட்' : 3 மணி நேரம் தேர்வு தாமதம்.


அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இன்று நடைபெறவிருந்த தேர்வு 3 மணி நேரம் தாமதமானது.

இன்று காலை 9.30க்கு தேர்வு தொடங்குவதாக இருந்தது. லக்னெளவில் வெளிமார்க்கெட்டுகளில் வினாத்தாள்கள் விற்கப்படுவதாத கிடைத்த தகவலால் நண்பகல் 12 மணிக்கு தேர்வு தொடங்கியது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவதாக இருந்த இரண்டாவது தேர்வு மாலை 4 மணி முதல் பிற்பகல் 7 மணி வரை நடைபெற உள்ளது.

80-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1600 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 12 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

இந்த வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஒருவரை உத்தரப்பிரதேச சிறப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வினாத்தாளை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக மேலும் 2 பேரைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். நேற்று நள்ளிரவு அந்த வினாத்தாள் எங்களுக்குக் கிடைத்தது என லக்னெள சிறப்புப் பிரிவு போலீசார் விஜய் பிரகாஷ் தெரிவித்தார்.

No comments: