Sunday, May 1, 2011

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் : ஐ.நா.வுக்கு திருமா கோரிக்கை.


இலங்கையில் ராஜபக்சே தலைமையில் நடத்தப்பட்டது இனப்படுகொலைச் சம்பவம் என அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரியும், ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய திருமாவளவன்,

இலங்கையில் படுகொலை நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தாமதமாக அறிக்கை வெளியிட்டாலும், உண்மையான அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.சபை முடிவை வரவேற்கிறோம். வெறும் போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல், இனபடுகொலை என்று அறிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளைம் அவசரமாக கூட்டி, ஐ.நா. சபை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை இந்தியாவும் ஆதரிக்கக் கூடாது.

இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக கூட்டம் நடத்தப்படும் என்றும், ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றார் திருமாவளவன்.

No comments: