Wednesday, May 11, 2011

கிராமவாசி போல பைக்கில் சென்ற ராகுல் !

உத்தரபிரதேச மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்காக அதிக நஷ்டஈடு கேட்டு போராடி வரும் விவசாயிகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இன்று அதிகாலை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

காவலர்களின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு சாதாரண மனிதர் போல மோட்டார் சைக்கிளில் பிரச்சனைக்குரிய கிராமத்திற்கு சென்று அங்குள்ள விவசாயிகளை ராகுல் சந்தித்து பேசினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகே அமைந்துள்ள பட்டா பர்சால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் யமுனா எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு கூடுதல் நஷ்டஈடு கேட்டு போராடி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனையடுத்து கிராம பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இந்த கிராமத்துக்கு திடீரென சென்றார். கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாதுகாவலர்களிடமிருந்து விலகி மோட்டார் சைக்கிளில் அவர் பயணம் மேற்கொண்டார்.

அதிகாலை 6 மணி அளவில் சாதாரண கிராமவாசி போல மோட்டார் சைக்கிளில் வந்த அவரை கிராமத்தில் இருந்த காவலர்கள் அடையாளம் காண முடியவில்லை. கிராமத்திற்கு சென்று அங்கிருந்த விவசாயிகளை ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சனை மற்றும் போராட்டத்திற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கனவே ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை விவசாயிகளை நேரில் பலமுறை சந்தித்துள்ளார். இந்நிலையில் அவர் போராடி வரும் விவசாயிகளை இன்று அதிகாலை நேரில் சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 comment:

Chittoor Murugesan said...

மத்திய அரசாகட்டும், காங்கிரஸ் ஆளும் மானில அரசுகளாகட்டும் இதுவரை பல்வேறு காரணங்களுக்காக நில சேர்கரிப்பில் ஈடுபடவில்லையா? அங்கெல்லாம் விவசாயிகள் அதிக நஷ்ட ஈடு கேட்டு தர்ணா செய்யவில்லையா? அங்கெல்லாம் ராகுல் ஏன் தர்ணா செய்ய வில்லை.

ராகுல் பல்வேறு அமைப்புகளின் ஹிட் லிஸ்டில் இருப்பது அவருக்கு தெரியாதா? " நடக்கக்கூடாதது" ஏதாவது நடந்தால் அதற்கு யார் பொறுப்பு பாதுகாப்பின்றி பைக்கில் சென்று நாடகமாடிய ராகுலின் இந்த செயல் பிணத்தை கட்டியழும்போதும் தாண்டவக்கோணே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோணே என்ற வரிகளை ஞா படுத்துக்கிறது.

சாகும்போது சங்கரா சங்கரா என்றானாம் எவனோ.அதைப்போல யு.பி.ஏ அரசு வீட்டுக்கு அனுப்பப்பட உள்ள இந்த நிலையில் ராகுலும் ஏதோ ட்ரை பண்ணாப்ல இருக்கு.