Sunday, May 15, 2011

செம்மொழி நூலகம் அதிரடியாக மாற்றம்.

பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை: செம்மொழி நூலகம் வேறு இடத்திற்கு மாற்றம்

2011 பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று 3-வது முறையாக அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்-அமைச்சராக திங்கட்கிழமை பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில், பழைய தலைமை செயலகத்திலேயே புதிய சட்டப்பேரவை அமைக்கப்படுகிறது. அதற்காக சட்டப்பேரவை இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது.

மேலும் பழைய தலைமைச்செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த செம்மொழி தமிழாய்வு மையப் பெயர்பலகை மாற்றப்பட்டு தமிழ்நாடு அரசு தலைமைச்செயலக பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

1 comment:

goma said...

எந்த ஒரு நியாயமான காரணமும் இன்றி ,தலைமைச் செயலகம் மாற்றப் பட்டது குறித்து யாருமே கேள்வி எழுப்பவில்லை.இன்று,பழமையும் பெருமையும் வாய்ந்த கட்டிடம் புதிக்கப் பட்டு வருவது அனைவருக்கும் கேள்விக் குறியாக நிற்கிறது