Sunday, May 15, 2011

தீவிரவாத ஆதரவு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கோரிக்கை.

தீவிரவாத ஆதரவு பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவிகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்காவுக்கு உலக நாடுகள் கோரிக்கை

சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அந்த நாட்டு உளவுபடைக்கு தெரியுமா என்ற சந்தேகம் உலகமக்களிடையே உள்ளது.

இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு பதில் பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளை பரப்பி வருகின்றனர். பாகிஸ்தானில் இன்னும் பல தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர். அவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்தாத பாகிஸ்தான் அரசு அமெரிக்காவின் தாக்குதலை மட்டும் கண்டித்தது.

பின்லேடனை சுட்டுக் கொன்றதால் பாகிஸ்தான் அரசும் அந்த நாட்டில் உள்ள அணு உலைகளும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. இதை அமெரிக்கா உதவியின்றி பாகிஸ்தான் முறியடிப்பது கஷ்டம் என்று பல்வேறு நாட்டின் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத ஆதரவு நாடு. எனவே பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்து வரும் ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுவே தீவிரவாதத்துக்கு துணைபோகும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் பதிலடியாக இருக்கும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்கா இதனை ஏற்கும் நிலையில் இல்லை.

இதற்கிடையே பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

No comments: