மு.க.அழகிரி திருமண மண்டபம் மீது தாக்குதல்
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார்.
‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.
நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அழகிரியின் திருமண மண்டபமும் தாக்கப்பட்டுள்ளது. மேலும், அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை வந்து கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுகிறது.
அழகிரி ஆதரவாளர் பொட்டுசுரேஷ் வீடு மீது தாக்குதல்
மதுரையில் முக்கிய திமுக பிரமுகரும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு நெருக்கமானவருமான சுரேஷ் பாபு என்கிற பொட்டு சுரேஷ் வீடு மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிமுக தரப்பினர்தான் இந்த தாக்குதல் நடத்தியது என்று அழகிரியிடம் முறையிட்டுள்ளார் பொட்டு சுரேஷ். நடிகர் வடிவேலு வீடு மற்றும் பண்ணை வீடு மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வேளையில் பொட்டு சுரேஷ் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொட்டு சுரேஷை தொடர்ந்து மதுரையில் மற்ற திமுக பிரமுகர்கள் வீடு மீதும் தாக்குதல் தொடரலாம் என்பதால் அவர்களின் வீடுகளில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தேர்தல் சமயத்தில் அழகிரி பின்னால் சென்று போட்டோ பிடித்த மதுரை கலெக்டர் சாகாயம் என்ன செய்துகொண்டிருக்கிறார்?

2 comments:
எங்களுக்கும் காலம் வரும் .. அப்போ வீட்டை மட்டும் தாக்கமாட்டோம் .. நினைவில் இருக்கட்டும்
அழகிரியா ............அப்படி யாரும் இருக்கின்றார்களா?
ஓஓஓஓ.....சன் டிவியில் ரௌடி என்று அன்பாக அழைக்கப்பட்ட நபரா?
Post a Comment