Friday, April 8, 2011

தொண்டை வலியால் விஜயகாந்த் அவதி.

தொண்டை வலியால் விஜயகாந்த் அவதி - நெய்வேலி பிரச்சாரம் ரத்து.
தொண்டை வலியால் விஜயகாந்த் அவதி;    நெய்வேலி பிரசாரம் ரத்து

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க- தே.மு.தி.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். விஜயகாந்த்துக்கு தொண்டை வலி இருந்து வருகிறது. அதையும் பொருட்படுத்தாமல் அவர் இடைவிடாது கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார். நேற்று அவர் கடலூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

திட்டக்குடியில் பிரச்சாரத்தை தொடங்கி பிற்பகல் விருத்தாசலத்தில் முடித்தார். பின்னர் ஒய்வெடுப்பதற்காக நெய்வேலி வந்தார். அப்போது விஜயகாந்த் தொண்டை வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து டாக்டர் சுப்பிரமணியன் வந்து விஜயகாந்த்தை பரிசோதித்தார். கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர் ஆலோசனை கூறினார்.

இதையடுத்து விஜயகாந்த் நேற்று மாலை நெய்வேலியில் மேற்கொள்ள இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு ஓய்வு எடுத்தார். விஜயகாந்த் பிச்ரசாரம் செய்வதற்காக நெய்வேலி இந்திரா நகர், ஆர்ச் கேட் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். விஜயகாந்த் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்தப்பகுதியில் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் செய்வார் என்று தே.மு.தி.க.வினர் தெரிவித்தனர்.

No comments: