Monday, May 9, 2011

இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றி வருமானவரித்துறை தீவிர ஆய்வு.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின் கறுப்பு பணம் பற்றி வருமானவரித்துறை தீவிர ஆய்வு

இந்தியாவை சேர்ந்த சிலர் சுவிட்சர்லாந்து, வெர்ஜீன் தீவுகள் மற்றும் பனாமஸ் நாடுகளில் உள்ள வங்கிகளில் தங்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இது இந்தியாவின் பொருளாதாரத்தை கேள்விகுறியாக்கி உள்ளது.

எனவே, அங்கு கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்த விவரத்தை வருமான வரித்துறை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து, பனாமஸ், வெர்ஜீன் தீவு ஆகிய நாடுகளுக்கு தனிப்பட்ட முறையிலோ அல்லது வியாபார ரீதியாகவோ சென்று வருவோரை ரகசியமாக கண்காணித்து வருகிறது.

இதில், வருமானவரி துறையின் விமான உளவு பிரிவு ஈடுபட்டுள்ளது. இந்த பிரிவு சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து பயணம் செய்தவர்களின் விவரங்களை திரட்டியுள்ளது.

இதுவரை 1000 பேரின் பயண தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சுமார் 20 லட்சம் விமான பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்கள் பயணம் குறித்த உண்மையான தகவல்களை கூறவில்லை என வருமானவரித் துறையினரின் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் பலர் தங்கள் முதலாளிகளுக்கு பினாமியாக செயல்பட்டிருக்கலாம். எனவே தகவல் தராத வரி ஏய்ப்பாளர்களிடம் தகவல் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments: