Monday, May 9, 2011

+2 தேர்வு முடிவுகள் ஒரு பார்வை.


பிளஸ் 2 தேர்வில் ஓசூர் மாணவி முதலிடம் .

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் 1,190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.


மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் :


தமிழ் : 195

ஆங்கிலம் : 195

கணிதம் : 200

இயற்பியல் : 200

வேதியியல் : 200

உயிரியல் 200

ரேகாவின் தந்தை கேசவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். ரேகாவுக்கு ஒரே தங்கை, கிருத்திகா. கிருத்திகா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவன் 2ஆம் இடம் பிடித்தார்.

2010-2011 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 1200க்கு 1187 மதிப்பெண்கள் பெற்று கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த மாணவன் வேல்முருகன் 2ஆம் இடம் பிடித்தார் பெற்றார்.

3வது இடத்தில் 4 மாணவர்கள்

4 மாணவர்கள் 1186 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3வது இடத்தைப் பிடித்தனர்.

நெல்லை எஸ்ஜெஎஸ்எஸ்ஜெ பள்ளி மாணவி வித்ய சகுந்தலா.

பெரியகுளம் ரகுநாதன்,

நாமக்கல் சிந்துகவி,

ஓசூர் பி.எஸ்.ரேகா.


+2 தேர்வு முடிவு: 85.9 சதவீத தேர்ச்சி
.

பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தமிழில் முதல் 3 இடம்: விழுப்புரம் மாணவர்கள் சாதனை.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., அகடெமி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள் தமிழில் மாநில அளவில் முதல் 3 இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மாணவன் கோகுலகிருஷ்ணன் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1172.

2வது இடம் பிடித்த மாணவர் எஸ். மகேஸ்வரன் 198 மதிப்பெண்கள் தமிழில் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1156.

3வது இடம் பிடித்த மாணவர் தினகரன். தமிழில் 198 மார்க்குகள் பெற்றுள்ளார். அவரது மொத்த மதிப்பெண் 1144 ஆகும்.

ஆங்கிலத்தில் முதல் 3 இடம் : ஒசூர் மாணவிகள் சாதனை.

பிளஸ் 2 தேர்வில் ஆங்கில மொழி பாடத்தில், ஓசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் மாநிலத்தில் முதல் 2 இடங்களை பிடித்துள்ளனர்.

மாணவி கே.ரேகா ஆங்கிலத்தில் 200க்கு 195 மார்க்குகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அவரது மொத்த மார்க்குகள் 1190. இவர் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் ரேங்க் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தையும் ஓசூர் விஜய வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிதான் பெற்றுள்ளார். 2ம் இடம் பிடித்த மாணவியின் பெயர் பி.எஸ்.ரேகா. இவர் பெற்ற மார்க் 195. மொத்த மதிப்பெண்: 1186.

ஆங்கிலத்தில் 3வது இடத்தை சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா பிடித்துள்ளார்.

கணிதத்தில் 2720 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் கணிதத் தேர்வில் 2720 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வேதியியலில் 1243 பேர் 200க்கு 200

வேதியியல் பாடத்தில் 1243 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இயற்பியலில் 646 பேர் 200க்கு 200

+2 தேர்வில் இயற்பியல் பாடத்தில் 646 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

உயிரியலில் 615 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் 615 மாணவர்கள் உயிரியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

கணித அறிவியலில் 223 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் கணித அறிவியலில் 223 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

தாவரவியல் பாடத்தில் 4 பேர் 200க்கு 200

பிளஸ் 2 தேர்வில் தாவரவியல் பாடத்தில் 4 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 223 பேர் 200க்கு 200

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 223 பேர் 200க்கு 200 மார்க்குகள் பெற்றுள்ளனர்.

விலங்கியலில் யாரும் 200 மார்க் பெறவில்லை


கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. விலங்கியல் பாடத்தில் இந்த ஆண்டு ஒருவர் கூட 200க்கு 200 மார்க்கு பெறவில்லை.


பிறமொழிப்பாடம் : முதல் 3 இடம் பெற்ற மாணவர்கள்.

பிறமொழிப்பாடம் - முதலிடம்.

செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.ஆர்.டி.எப்., பள்ளி மாணவி சந்தியா சமஸ்கிருதம் மொழிப்பாடம் எடுத்து 1191 மொத்த மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

பிறமொழிப்பாடம் - இரண்டாவது இடம்.

இரண்டாவது இடத்தை சென்னை தி.நகர் வித்யோதயா மெட்ரிக் பள்ளி மாணவி ஜெயப்பிரதா பி‌டித்துள்ளார். அவர் பிரெஞ்சை மொழிப்பாடமாக எடுத்திருந்தார். அவரது மொத்த மதிப்பெண் 1190.

பிறமொழிப்பாடம் - மூன்றாவது இடம்.

3வது இடத்தை பிரெஞ்சு மொழிப்பாடம் எடுத்து படித்த செங்கல்பட்டு எச்.எப்.சி., பள்ளி மாணவி மகாலட்சுமி 1189 மார்க் எடுத்து பிடித்துள்ளார்.


டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன் : மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரேகா பேட்டி.
டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு  சேவை செய்வேன்: மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவி ரேகா பேட்டி

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி மாணவி ரேகா 1200-க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாணவி ரேகா 10-ம் வகுப்பு படித்த போது 479 மதிப்பெண்கள் எடுத்து ஓசூர் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர்கள் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். சக மாணவிகள் அவரை தூக்கி கொண்டு பள்ளியை சுற்றி ஊர்வலமாக வந்து உற்சாகமாக கொண்டாடினர்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி ரேகா நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் இடைவிடாமல் தொடர்ந்து படித்தேன், எனக்கு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், பெற்றோர் என அனைவரும் உதவி செய்தனர். நான் மாநிலத்தில் முதலிடம் பெற்றது சந்தோசமாக இருக்கிறது. நான் டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன்.

மற்ற மாணவிகளை போலவே நானும் படித்தேன். பாடத்தை புரிந்து கொண்டு படித்ததால் நான் இந்த சாதனையை படைத்தேன். இதற்காக நான் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மாநிலத்தில் முதலிடம் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை, எனக்கு சந்தோசமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments: