Sunday, April 17, 2011

49-ஓ - வுக்கு நல்ல வரவேற்பு : நரேஷ்குப்தா.


தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 26000 வாக்குகள் 49 ஓ-விற்கு கிடைத்துள்ளது.

"49 ஓ' குறித்து தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், ‘சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது.

தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.


No comments: