Sunday, April 17, 2011

சகாயம் அதிரடி : மதுரை மேற்கு தொகுதியில் மறுதேர்தல் நடத்தப்படுமா?


மதுரையில் சட்டமன்ற தேர்தலையொட்டி 10 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை அறியவும், கண் காணிக்கவும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் தீவிர சோதனை நடத்தி மதுரை மாவட்டத்தில் ரூ.4 கோடி வரை பறிமுதல் செய்தனர்.

மேலும் தொகுதிகளில் பணம் பட்டுவாடா செய்ய முயன்ற போது பல லட்சங்கள் கைப்பற்றபட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட நேரு நகரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் அதிகாரி ஜெய்சிங் ஞானதுரை தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த காரில் இருந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது அப்பள வியாபாரி என்றும், எந்த கட்சியையும் சாராதவர் என்றும் கூறி முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறினார். இதனால் அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே காரை சோதனையிட்டனர்.

அப்போது அதில் 40 பக்க கணக்கு வழக்குகள் அடங்கிய லிஸ்ட் இருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்த போது மேற்கு தொகுதிக்குட்பட்ட 4 வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள் எழுதப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் ரூ.81 லட்சத்து 20 ஆயிரத்து 400 பட்டுவாடா செய்யப் பட்டதாக தெரிய வந்தது.

இதில் 65-வது வார்டுக்கு ரூ.16 லட்சத்து 35 ஆயிரமும், 66-வது வார்டுக்கு ரூ.18 லட்சத்து 96 ஆயிரத்து 200-ம், 67-வது வார்டுக்கு ரூ.21 லட்சத்து 11 ஆயிரத்து 800-ம், 69-வது வார்டுக்கு ரூ.24 லட்சத்து 41 ஆயிரத்து 400-ம் ஒதுக்கப்பட்டு இருந்தது இந்த லிஸ்ட் மூலம் தெரியவந்தது. இதில் ரூ.60 லட்சத்தை வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த கணக்கு வழக்குகளும் அந்த லிஸ்டில் எழுதப்பட்டு இருந்தது.

கைப்பற்றப்பட்ட லிஸ்ட் மதுரை மாவட்ட கலெக்டர் சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கு தொகுதியில் அந்த லிஸ்டில் குறிப்பிட்டபடி பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் தமிழக தேர்தல் கமிஷன் மதுரை மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளது.

இதுபற்றி மதுரை கலெக்டர் சகாயம்,

மதுரை மேற்கு தொகுதியில் சம்பவத்தன்று ஒரு காரில் இருந்த ஒரு நபரை சோதனையிட்டபோது அவரிடம் ஒரு டாக்குமெண்ட் கைப்பற்றப்பட்டது. அதில் எந்ததெந்த வார்டுக்கு எவ்வளவு பணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் குறிப்பிட்ட பணம் எவ்வளவு என்று கணக்கு பார்த்து வருகிறோம்.

இந்த ஆய்வுக்கு பிறகு இதன் அறிக்கையை தமிழக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் தவறு நடந்து இருந்தால் மேற்கு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும். என்று கூறியுள்ளார்.

1 comment:

Anonymous said...

in these cases the candidates should be changed or charged,
otherwise people will have to vote for the same scoundrals for fear.