Sunday, April 17, 2011

மம்தாவுக்கு 100 கோடி கறுப்பு பணம் : கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு.


மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (18-ந்தேதி) நடக்கிறது. கடைசி கட்ட ஓட்டுப்பதிவு மே 10-ந்தேதி நடக்கிறது. ஆளும் இடதுசாரிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தலில் மம்தா பானர்ஜி கறுப்பு பணத்தை பயன்படுத்துவதாக மம்தா பானர்ஜி மீது மாநில வீட்டு வசதித்துறை மந்திரி கவுதம் தேவ் குற்றம் சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம்,

தேர்தல் பிரசாரத்துக்காக மம்தா பானர்ஜி கறுப்பு பணத்தை பயன்படுத்துகிறார். தேர்தலுக்கு ரூ.100 கோடி செலவழிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ரூ.15 லட்சம் வீதம் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 226 பேருக்கு ரூ.34 கோடி வழங்கப்படுகிறது.

மத்திய மந்திரி சூகுல்ராய் தேர்தல் பிரசாரத்துக்காக இதை வழங்கி உள்ளார். மம்தா பானர்ஜியின் மேற்பார்வையில் வழங்கப்பட்டுள்ளது. தன்னை ஊழலற்ற அரசியல்வாதி போன்று மம்தா காட்டிக் கொள்கிறார். விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது குறித்து புகார் கூறப்படும். இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

இதேபோல டெலிவிசனில் விளம்பரம் செய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி வரை செலவழித்துள்ளது. ரூ.10 கோடியில் 2 ஹெலிகாப்டர் வாங்கப்பட்டுள்ளது’’ என்று உள்ளார்.


No comments: