Thursday, May 5, 2011

2ஜி வழக்கில் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் : கனிமொழி.



2ஜி ஊழல் வழக்கை சட்டரீதியாக சந்தித்து தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

இது மிக, மிக கடுமையான குற்றச்சாட்டு. இதில் இருந்து வெளியில் வருவோம். தவறு செய்யவில்லை என நிரூபித்து இந்த வழக்கில் இருந்து வெளியில் வருவேன் என கனிமொழி தெரிவித்தார்.

சட்டரீதியாக அந்த வழக்கை எதிர்ப்போம். நானும் கூட்டு சேர்ந்து சதிசெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. சட்டரீதியாக அதை எதிர்ப்போம் என கனிமொழி தெரிவித்தார்.

இந்திய நீதி அமைப்பில் நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவுசெய்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார் அவர்.

இந்த விவகாரத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என அவர் மறுத்தார். இந்த விவகாரத்தால் எனது குடும்பம் பிளவுபடவில்லை. திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்பக்கம் எனது குடும்பத்தினர் இருப்பார்கள் என்றார் அவர்.

முன்ஜாமீன் கேட்க மாட்டேன் : இதனிடையே சிஎன்என்-ஐபிஎன் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் சிபிஐ தன்னை கைது செய்ய விரும்பினால் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடவிருப்பதாகவும், முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்.

No comments: