
ஸ்ரீ சத்ய சாய்பாபா கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் மண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சகணக்கான பொதுமக்கள் ,பக்தர்கள் , உயர்அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேலும் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் 26-04-2011 அன்று மாலை பிரசாந்தி நிலையம் வந்தனர் . மன்மோகன்சிங், சோனியா காந்தியும் சாய்பாபாவின் உடலுக்கு முன் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து அஞ்சலி செலுத்தினர் .
மாலை 6 மணி வரை சாய்பாபாவின் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது .ஆனால் அஞ்சலி செலுத்த பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதால் இரவு முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது .
சாய்பாபாவின் உடல் 27-04-2011 காலை 9 - 9.30 இறுதி சடங்கு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது .இவ் இறுதி சடங்கில் ஆந்திர மாநில கவர்னர் மற்றும் ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment