வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது, சேலம் மாநகரத்தில், உள்ள பள்ளபட்டியிலும் பின்னர் கொண்டலாம்பட்டியிலும் காவல் ஆய்வாளரராக இருந்த லட்சுமணன் மீது அங்கம்மாள் நகர் நிலா மோசடி, பிரிமியர் மில் நிலா மோசடி மட்டுமில்லாமல் இன்னும் பல மோசடி வழக்குகள் உள்ளது.
வீரபாண்டி ஆறுமுகத்திடம் நெருக்கமாக இருந்த பல திமுக வினரே எரிச்சல் படும் அளவுக்கு அவரை அப்பா.. அப்பா... என்று கூப்பிட்டுக்கொண்டு முடிந்த அளவுக்கு கட்டைப்பஞ்சாயத்து பண்ணியவர் லட்சுமணன்.
செல்வாக்கில் இருந்தபோது பல உயர் காவல்துறை அதிகாரிகளை கூட பந்தாடிய லட்சுமணன் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கன்னியாகுமரிக்கு மற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், பணியில் சேராமல் விடுப்பு எடுத்துக்கொண்டு சேலத்துக்கு வந்துவிட்டார் லட்சுமணன்.
அங்கம்மாள் நகர், பிரிமியர் மில் நிலா மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதும், பதவியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட லட்சுமணன், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று பெங்களூரில் லட்சுமணனை சேலம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
லட்சுமணன் கைது செய்ததை ரகசியமாக வைத்திருக்கும் சேலம் காவல்துறை அதிகாரிகள், தன்னுடைய லாபத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கும் இயல்புடைய லட்சுமணனை வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அப்ருவராக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
லட்சுமணன் அப்ரூவராகும் பட்சத்தில் இன்னும் பல பிரபலங்கள் உள்ளே செல்வார்கள் என்கிறார்கள் சேலம் கவல்துறையினர்.
No comments:
Post a Comment