நில மோசடி வழக்கில் முன்னாள் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு கேரளாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் பொட்டியபுரத்தைச் சேர்ந்த மாதையன் என்பவர் சேலம் போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் தனக்குச் சொந்தமான நிலத்தை தமிழரசு அபகரித்து விட்டதாக கூறியிருந்தார்.
இதையடுத்து சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தமிழரசுவைத் தேடி வந்தனர். அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவருக்கு வலை வீசப்பட்டது. இதில் அவர் கேரளாவில் பதுங்கியிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார் தமிழரசுவைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழரசு பாமகவில் மாநில துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நில மோசடி வழக்குகளில் இதுவரை திமுகவினரே பெருமளவில் கைதாகி வந்தனர். இந்த நிலையில் பாமகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
1 comment:
Poy Vazhakku >>>>> Adangu ADMK AMMA ...enga katchi kaarngalai kaithu panninal......
Post a Comment