Wednesday, July 27, 2011

வீரபாண்டி ஆறுமுகம் முன்பு உட்கார பயந்த விசாரணை அதிகாரி.



உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சேலம் நகர காவல் நிலையவளாக்கத்தில் உள்ள மாநகர குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு சென்றிருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர் பாதுகாப்பு என்ற பெயரில் நகர காவல் நிலையத்தை இழுத்து பூட்டு போட்டுவிட்டனர், புகார் கொடுக்க வருவபவர்கள் காவல் நிலையம் இருக்கும் பெரிய கடைவீதியை நெருங்க முடியாத அளவுக்கு வீதியின் இரண்டு பக்கமும் தடுப்புகள் ஏற்படுத்தி தடை செய்துள்ளார்கள்.


இதனால், பழைய பேருந்து நிலையத்திலிருந்து, கடைவீதிக்கும், முதல் மற்றும் இரண்டாவது அக்கரகாரத்திற்கும் சின்னக்கடை வீதிக்கும் செல்ல வழிவிடாமலும்,

அதேபோல சேலத்தின் கிழக்கு பகுதியிலிருந்த பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள் பெரிய கடை விதிவழியாக செல்ல காவல்துறையினர் தடை செய்துள்ளார்கள்.

நகர காவல் நிலையம் உள்ள, பெரிய கடைவீதியில் உள்ள எல்லகடைகளும் பூட்டச்சொல்லி ள்ளதால் வணிகர்களும், ஆடி பண்டிகைக்கு கடைவீதியில் ஆடைகள் எடுக்க வரும் மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

இதற்கிடையில் அங்கம்மாள் நகர் நிலா மோசடி தொடர்பாக முன் ஜாமீன் பெற்றுள்ள வீரபண்டி ஆறுமுகம், நிலத்தை இழந்தவர்கள் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகாரில் சொல்லப்பட்டிருக்கும் சில நபர்களுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று உயர் நீதி மன்றத்தில் கூறியுள்ளார்

அதை உடைக்கும் விதமாகக வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், புகாரில் சொல்லப் பட்டிருக்கும் நபர்களுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதமான போட்டோ ஆதாரங்களுடன், அங்கம்மாள் நகரில் குடியிருந்து வீட்டை இழந்த 29 நபர்களிடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 164 பிரிவின் கீழ், சேலம் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

00எதிர் காலத்தில் சாட்சிகள் மாறாமல் இருப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஓன்று என்று காவல் துறைவட்டரங்களில் தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் விசாரணை முடிந்து வீரபாண்டி ஆறுமுகத்தை வீட்டுக்கு அனுப்பக்கூடாது, எப்படியாவது ஒரு வழக்கில் சிறைக்கு அனுப்பவேண்டும் என்று ஒரு பிரிவு காவல் துறை அலுவலர்களும், அந்த திட்டத்திலிருந்து வீரபாண்டி ஆறுமுகத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினரும் துடிக்கிறார்கள்.

விசாரணை அதிகாரியான உதவி ஆணையாளர் பிச்சை, வீரபாண்டி ஆறுமுகத்தின் முன்னால் உட்கார கூட தைரியமில்லாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்துவிட்டு ‘உக்காரையா”என்று வீரபாண்டிஆறுமுகம் சொன்ன பின்னர்தான் தனதுஇருக்கையில் உட்காந்தார்.

No comments: