பூமியின் துணை செயற்கைக்கோளான சந்திரனில் நிறைய கனிம வளம் இருப்பதாக முதலில் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் தண்ணீர் வளம் உள்ளதாப என்பது பல தடவை ஆராய்ச்சிகள் செய்த பிறகும் உறுதிபடுத்தப் படாமல் இருந்தது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திராயன் மிகத் திறமையாக ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தது.
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் அதை உறுதி செய்தனர். இதையடுத்து சந்திரனில் என்னென்ன வளங்கள் உள்ளது என்பதை கண்டு பிடிக்க நாடுகளிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா ஆகிய நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே சந்திரனில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிக தண்ணீர் வளம் உள்ளதாக அமெரிக்காவில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி, கர்ஜினிஅறிவியல் கழகம், பிரவுன் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இதுவரை கணிக்கப்பட்டுள்ள அளவை 100 மடங்கு அதிக சுத்தமான தண்ணீர் நிலாவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். இது சந்திரன் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லா நாட்டு விஞ்ஞானிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment