Wednesday, May 4, 2011

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது : அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்.

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது: அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம்

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது என்று கூறி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பின்லேடன் கொல்லப்பட்டது முக்கிய மைல் கல் ஆகும்.

பின்லேடன் தங்கி இருந்த கட்டிடம் குறித்து ஏற்கனவே 2009-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வுடனும், பிற நட்புறவு புலனாய்வு ஏஜென்சிகளுடனும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் பாகிஸ்தான் ஒத்துழைத்து வருகிறது. கமாண்டோ நடவடிக்கை மூலம் பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட விரோதமானது. இது அமெரிக்கா தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கை ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

யோகா.எஸ் said...

அப்போ,சிறி-லங்கா அரசாங்கம் செய்தது போல் ஊர் பூராவும் குண்டு வீசி"மக்களை" கொன்று குவித்தது போல் கொன்று குவிக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ?ஒசாமா இல்லாது போய் விட்டதால் இனி மேல் அமெரிக்காவிடமிருந்து "கறக்க"முடியாதே என்ற ஆதங்கமோ?இலங்கை அரசு கூட இப்படித் தான் எதிர் பார்த்தது,வாரி இறைப்பார்களென்று!இப்போது கதையே கந்தலாகி விட்டது!!!!!!!!!