Tuesday, April 5, 2011

பாகிஸ்தான் கேப்டன் அப்ரிதியும - இலங்கை அதிபர் ராஜபக்சேவும்.

இந்தியர்களை நேசிக்கிறேன் - தவறாகப் பேசவில்லை: அப்ரிதி.

நான் இந்தியர்கள் குறித்து கூறிய கருத்துக்களை மீடியாக்கள் தவறாக வெளிப்படுத்தியுள்ளன. நான் இந்தியர்களை நேசிக்கிறேன், இந்தியாவில் விளையாடிய அனுபவம் அற்புதமானது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிதி.
Shahid Afridi
Getty Images
உலகக் கோப்பைப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அளித்த பேட்டியில், இந்தியர்களுக்கு குறுகிய மனசு என்று கூறி விமர்சித்திருந்தார் அப்ரிதி. இந்திய மீடியாக்களையும் கடுமையாக அவர் விமர்சித்திருந்தார்.

ஆனால் தான் அப்படி கூறவில்லை என்று இப்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மீடியாக்கள் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். இது வெட்கமாக உள்ளது. இந்திய, பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றுதான் நான் தொடர்ந்து விரும்பி வருகிறேன். சில நேரங்களில் அதுகுறித்துக் கூறும்போது ஏதாவது வேறு அர்த்தம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் இப்போது நான் பேசியதையும் தவறாக கூறி வி்ட்டனர்.

இந்தியாவில் விளையாடியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. இந்தியர்களை நான் நேசிக்கிறேன். எனது கருத்துக்களை எதிர்மறையாக பார்க்காதீர்கள். இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு எப்போதும் ஆதரவு இருந்து வருகிறது. எனவே இதுபோன்ற சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி இரு நாட்டு மக்களிடையே துவேஷத்தை வளர்த்து விட மீடியாக்கள் காரணமாக அமைந்து விடக் கூடாது

இந்தியாவுக்கு நாங்கள் விட்டுக் கொடுத்துள்ளோம்-ராஜபக்சே பேச்சு.

இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.

இந்தியாவிடம் தோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பி விட்டது. அவர்கள் ராஜபக்சேவை அவரது அதிபர் மாளிகைக்குச் சென்று சந்தித்தனர்.

அப்போது ஆளுக்கு ஒரு தங்க நாணயமும், கல் பதித்த பிரேஸ்லெட்டும் கொடுத்து அனைவரையும் கெளரவித்தார் ராஜபக்சே. பின்னர் வீரர்களைப் பாராட்டிப் பேசினார்.

அவர் பேசுகையில், கோப்பையை வென்றீர்களோ, இல்லையோ, இறுதிப் போட்டி வரை போனதே பெரிய சாதனைதான். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள்.

தோல்வி ஏமாற்றமாகத்தான் உள்ளது. இருப்பினும் கெளரவமாக தோற்றுள்ளீர்கள். எனது இந்திய நண்பர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், 2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட எங்களது சின்ன நாடு, 100 கோடி மக்களைக் கொண்ட உங்களுக்கு சந்தோஷத்தை விட்டுக் கொடுத்துள்ளது. 1983ம் ஆண்டுக்குப் பிறகு 2வது முறையாக சந்தோஷமாக நீங்கள் இருக்க நாங்களே காரணம்.

முத்தையா முரளிதரன் ஆற்றிய பங்கு அளப்பறியது. தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பந்து வீசினார் முரளிதரன். அவருக்கு இந்த நாடு கடன்பட்டுள்ளது என்றார் ராஜபக்சே. பின்னர் முரளிதரனை முதுகில் தட்டிக் கொடுத்து பெருமைப்பட்டார்.

No comments: