Tuesday, April 5, 2011

ராகுல்காந்தி - உடனிருந்து கொல்லும் பகை?


தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்ச போக்கால் தமக்கு எதிராக சக்தி வாய்ந்த ஒரு சதி வலை பின்னப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி உணர்ந்துள்ளார்.

எதிர்க் கட்சியை ஆளும் கட்சியாக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது.

அழகிரியின் அத்தனை அசைவுகளுக்கும் அணைகட்டுகிறது தேர்தல் ஆணையம்.

கிட்டதட்ட தேர்தல் ஆணையத்தின் முன். திமுகவும், அழகிரியும் நிராயுத பாணிகளாக நிற்க காரணம் யார்? இதன் பின்னனி என்ன என்பது புரியாத சூழலில் கருணாநிதியால் உணரப்பட்டதுதான் மினி எமர்ஜென்சி.

காங்கிரஸ் மேலிடம் நினைத்தால் தேர்தல் ஆணையத்தினை கட்டுப்படுத்தலாம். ஆனால் அவர்களின் நோக்கத்திலேயே நடைபெறுவதாக உணர்ந்த கருணாநிதி உஷாரானார்.

மேலும், ராசா கைது, கலைஞர் தொலைகாட்சி ரெய்டு, தயாளு, கனிமொழி விசாரணை இதையெல்லாம் குறைந்தபட்சம் தேர்தல் முடியும்வரை சி.பி.ஜ.யை தாமதப்படுத்த காங்கிரஸால் முடியும். ஆனால் அவர்களோ தங்களுக்குத் தொடர்பு இல்லை என்பது மாதிரி நடந்து கொண்டார்கள். தேர்தல் ஆணைய நடவடிக்கைகளிளும் அதே நடிப்பு தொடர கருணாநிதி கொந்தளித்துப்போனார்.

ஈரோடில் தொடங்கி, சேலம், வேலூர் இப்படி தொடர்ச்சியாக கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் எல்லாம் உன்னிப்பாக கருணாநிதியின் பேச்சை கவனிக்க வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது தமிழகத்தில் மீண்டும் ஒரு எமர்ஜென்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆகும். என்று மேடை தோறும் பேசிவருகிறார்.

நெருக்கடி காலத்தில் திமுகவிற்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை, என் மூலம் கேட்டறிந்து கொண்ட, முந்தைய எமர்ஜென்சியை கொண்டு வந்த பிரதமர் இந்திராகாந்தி சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் மன்னிப்பு கேட்ட நிகழ்வினையும் மேடைதோறும் கூறி வருகிறார்.

என்னுடைய அதிகாரிகள் ஆங்காங்கு நடத்திய அக்கிரமங்களுக்கு எல்லாம், அடக்கு முறைகளுக்கு எல்லாம், மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன். என்று அன்று இந்திராகாந்தி சொன்னதைக் கருணாநிதி இப்போது நினைவூட்டுவது, அவருடைய சந்தேகத்தை பிரதிபலிக்கிறது. இந்திராவைப்போல் இப்போதைய நிகழ்விற்கு யார் என்பது கேள்விக்குறி.

கருணாநிதி அதையும் மறைமுகமாக சொல்லியிருக்கிறார். நான் தமிழகத்திலே இருக்கிற அதிகாரிகளைக் கேட்கிறேன். உங்களுக்கு இந்த உத்தரவை இட்டது யார்? நாடாளுகின்ற தகுதி படைத்தவரா? இல்லை நாட்டை ஆண்டுகொண்டு இருக்கின்ற பிரதமரா? இல்லை...யார்?

இவர்களுக்கு உத்திரவிட்டது யார் என்று எனக்குத் தெரியும்! என்று பிரதமரை மீறிய, தேர்தல் ஆணையத்தை மீறிய ஓரு சக்தியை நோக்கியே இதைப் பேசியிருக்கிறார்.

ராகுல்காந்தியும், அவரைச் சுற்றியுள்ள அறிவுஜீவிகளாகக் கருதிக்கொள்ளும் பார்ப்பன மற்றும் மலையாள அதிகாரிகளே காரணம் என்று கருதப்படுகிறது.

இதே போல் ராஜீவ்காந்தியுடனும் இருந்த பார்ப்பன மற்றும் மலையாள அதிகாரிகளே, தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சதிவலை பின்னிய பின்னனி நாடறியும்.

திமுகவிற்கு பிரச்சனை என்றால் அதில் காங்கிரஸூம் தானே பாதிக்கும்.

காங்கிரஸ் கட்சி 63 இடங்களை திமுகவிடம் இருந்து வாங்கியது தவிர அவர்கள் வெற்றி பெறுவோம் என்று எண்ணவில்லை. பல தொகுதிகளில் தேர்தல் வேலை தொடங்காத நிலையே உள்ளது.

அவர்களுக்கு வெற்றி குறிக்கோள் இல்லை என்பது மாதிரி தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க. தோற்றால் போதும், அடுத்த தேர்தலில் வேறொரு வியூகம் அமைத்து அ.தி.மு.க. வீழ்த்துவது காங்கிரஸின் திட்டமாக இருக்கிறது.

இப்போது திமுகவின் தலையில் வெண்ணெயை வைத்து அது உருகி கண்ணை மறைக்கும் போது அமுக்குவதுதான் காங்கிரஸின் திட்டம். என்கிறார்கள்.

தோற்பதற்காகவே சீட்டு ஆடிய சூனியக்காரி மாதிரி, தொடர்ந்து சீட்டு ஆட்டத்தில் தோற்று, அதன் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து வைத்து....அதே சமயம் வெளியில் மிகப்பெரிய காரியத்தை போட்டியின்றி முடித்தாளாம் ஒரு சூனியக்காரி. நாட்டில் நடப்பதைப் பார்த்தால் அவ்வாறே எண்ணத் தோன்றுகிறது.

இதன் எதிரொலியாக வேலூர் கூட்டத்தில், மகாபலி சக்கரவர்த்தியின் கதையையும் சொல்லி இருக்கிறார் கருணாநிதி அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட மன்னனை வீழ்த்த யார், என்ன திட்டம் போட்டார்கள், என்று அவர் விளக்க., மூன்றடி மண் கேட்டு மாற்று உருவில் வந்தவர்களிடம் அந்த மன்னன் எப்படி சிக்கி பலியானான் என்று போகிறது கதை. உடனிருந்து கொல்லும் பகையை முழுமையாக வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மனது புழுங்கி உள்ளார் கருணாநிதி.

No comments: