Tuesday, April 5, 2011

கச்சத்தீவை மீட்க வேண்டும்-சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை.


தமிழர்களின் உயிரைக் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும்-சோனியாவுக்கு கருணாநிதி கோரிக்கை

தமிழர்களின் உயிர்ப் பிரச்சினையான கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நதிகளை தேசியமயமாக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வரின் பேச்சு:

மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை தேசியமயமாக்க மத்திய அரசு அதிகார வரம்புக்குட்பட்டு செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.நதி நீர்ப் பிரச்சினைகளுக்கு நதிகளை தேசியமயமாக்குவது மட்டுமே நீண்ட காலத் தீர்வாக அமையும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக தென்னக நதிகளையாவது இணைக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான முழு நிதியுதவியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

செம்மொழி தகுதி தமிழ் மொழிக்கு அளிக்கப்பட்ட வரலாறு குறித்து புரிய வைக்க வேண்டியதில்லை. அந்தத் தகுதியை தமிழுக்குத் தர வேண்டும் என்று 100 ஆண்டுகளாக தமிழகம் கோரி வந்தது. சூரியநாராயண சாஸ்திரி அறிவித்த அந்தத் திட்டம் அன்று நிறைவேறாமல், பல ஆயிரக்கணக்கான புலவர்கள், அறிஞர்கள் எல்லாம் நினைத்தும் நடைபெறாமல் போன அது, தி்முக ஆட்சியில், நான் முதல்வராகப் பொறுப்பேற்றகாலத்தில், சோனியாவை சந்தித்து, தமிழகத்திற்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்டபோது, தமிழை செம்மொழி அந்தஸ்து கொண்ட மொழியாக அரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டு தமிழை செம்மொழியாக அரிவித்தார். அந்த அறிவிப்பு மகததானது, மாபெரும் அறிவிப்பு, சரித்திரப் பிரசித்தி பெற்றது என்பதை விளக்கத் தேவையில்லை. அதற்காக இன்றும் தமிழக மக்கள் சோனியாவை வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இன்னொன்றும் கேட்கிறேன். தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக ஆக்கிட வேண்டும்.இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அமைவதற்கான பெருமையை உரிமையை எங்களுக்கு வழங்கிட வேண்டும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.

கல்வி மாநிலப் பட்டியலில் இல்லாமல் மத்திய அரசு பட்டியலில் இணைக்கப் பட்டிருக்கிறது இடைக்காலத்தில். அதை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்கக் வேண்டும் என்று சான்றோர்கள், ஆன்றோர்கள், பெரியோர்கள், கல்வியாளர்கள் கோரி வருகின்றனர். அதை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி குழுவின் பரிந்துரைகள் மற்றும் கல்வி வல்லுநர்கள் வலியுறுத்துகிறபடி கல்வியை மாநில அரசுப் பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும். அதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வர கோருகிறேன்.

இலங்கையுடன் 1974ம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடிப்பதற்கும், வலைகளை உலர்த்துவதற்கும் தேவாலாயத்தில் வழிபடுவதற்கும் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் 1976ம் ஆண்டு அவை திரும்பப் பெறப்பட்டதால் அடிக்கடி கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்ச்சிகளாக அதிகரித்துள்ளன. கச்சத்தீவை திரும்பப் பெறப்படுவதற்கான உதவிட வேண்டும். இது உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல, தமிழர்களின் உயிர்ப் பிரச்சினை. எனவே இரக்கத்தோடு இதில் தலையிட்டு ஆவண செய்ய வேண்டும்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் 2006ல் தொடங்கி நிறைவடையும் நேரத்தில் மதவாத காரணங்களைக் காட்டி தடை செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இன்னும் தீர்வு ஏற்படாமல் உள்ளது. காவிரிப் பிரச்சினையிலும் நடுவர் மன்றத் தீர்ப்புக்குப் பிறகும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேபோல பாலாறுப் பிரச்சினையும் உச்சநீதிமன்றத்தில்தான் உள்ளன. இந்த வழக்குகளில் வாய்தாவுக்கு வாய்தா வழங்கி நீதியைத் தாமதப்படுத்தும் நிலையை மாற்ற, இந்த வழக்குகள் உண்மைகளை உணர்ந்து, உரிய முறையிலேயே ஒழுங்கானமுறையிலே நடைபெறுவதுற்கு என்ன செய்லலாம் என்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுத்தால்தான் அராஜகம், அநாகரீகமாக தலையிடுவது ஏற்படாமல் அமைதியைக் காக்க முடியும். இதை அறிவுரையாக சொல்லவில்லை. எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.

தலித் புத்த மதத்தினருக்கு தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகள் உரி்மைகள் அலிக்கப்பட்டுள்ளது. அதேபோல தலித் கிறிஸ்தவர்களும் ஆதி திராவிட மக்களுக்கான சலுகைகளை கோரி வருகிறன்றனர். அதேபோல, கல்வி, வேலையில் சிறுபான்மையினர் உரிய சலுகைளை பெறுவதற்காக ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரையை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்குச் சமமான உரிமையை, ஆட்சி அதிகார அரசியல் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகள் நடைபெற்று வந்தாலும் கூட அதை விரைவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும், சோனியாவுக்கு உண்டு என்பதால் விரைவிலேயே அதை செய்து முடித்து தமிழர்களின் நெஞ்சங்களில் பால் வார்க்க வேண்டும் என்றார் கருணாநி

No comments: