இலங்கைக்கு யார் போனாலும் எதிர்த்து குரல் கொடுத்து வந்த அமைப்புகளுக்கு இந்த விஷயம் தெரியாது போலிருக்கிறது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியிருக்கிறார் பாடலாசிரியர் பா.விஜய்.
அங்கே பேசிய அவர், இன்னும் ஒரு படி மேலே போய் நான் அடுத்ததாக இயக்கி நடிக்கும் படத்தை இங்குதான் ஷட்டிங் செய்ய போகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
அசின், ஸ்ரேயா மாதிரி பெண்கள் யாராவது இலங்கை அழகான நாடு. இங்கே ஷட்டிங் எடுக்கலாம் என்று பேட்டி கொடுத்தால் அவர்கள் மீது விழுந்து பிராண்டாத குறையாக கோபப்படும் சில லெட்டர்பேட் கட்சிகள், பா.விஜய் விஷயத்தில் மட்டும் மவுனம் சாதிப்பது எதற்காக என்ற கேள்வி கேட்கிறார்கள் இந்த பயணத்தை அறிந்தவர்கள். அது கிடக்கட்டும்.
இந்த விழாவில் அவர் பேசிய ஒரு விஷயம் காதுல பூ வச்ச மாதிரி. நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை. நான் ஒரு கவிஞன். அவ்வளவுதான். என்று கூறியிருப்பதுதான்.
No comments:
Post a Comment