மேற்கு வங்காள மாநிலம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் உஷாதுலாக். பிரசவத்துக்காக அங்குள்ள சர்தார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அந்தப் பெண்ணுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்த போது கருப்பையில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இப்படி நிகழ்வது மருத்துவ அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை, கர்ப்பம் என அவர் நம்பி இருக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்த தகவலை உறவினர்களிடம் டாக்டர் சுபேந்து தத்தா விளக்கினார். ஆனால் உறவினர்கள் இதை ஏற்க மறுத்து விட்டனர். அந்த மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக அவர்கள் குற்றம் சாட்டினர்.
பொய்யான கர்ப்பம் என்று காட்ட டாக்டர்கள் முயற்சி செய்கின்றனர். ஆபரேசனில் ஏதோ தவறு நடந்துள்ளது. அதை மறைக்கவே இப்படியொரு பொய்யான தகவலை கூறுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் உண்மையை வெளியிடா விட்டால், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என்று கூறினர்.

No comments:
Post a Comment