Thursday, June 9, 2011

பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மரணம்.


பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேன் லண்டனில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 95.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவரது மாடர்ன் ஓவியங்கள் உலகளவில் 1 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவின் பிகாசோ என்று அழைக்கப்பட்ட ஹூசேன் சர்ச்சைகளில் சிக்குவதிலும் பேர் போனவர்.

கிறிஸ்டி பற்றி இவர் வரைந்த ஓவியம் 2 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்துக் கடவுள்கள் குறித்த இவரது சர்ச்சைக்குரிய ஓவியங்களால் இவருக்கு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்தியாவை விட்டு வெளியேறிய இவர் கத்தார் குடியுரிமையைப் பெற்றார். பின்னர் லண்டனில் வசித்து வந்தார்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் லண்டன் ராயல் பிராம்டன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு மாரடைப்பால் இன்று காலமானார்.

நாட்டை விட்டு வெளியேறினாலும் நாட்டின் மீது அதீத பற்று கொண்டவர். இந்தியாவில் தன்னால் தொடர்ந்து வாழ முடியவில்லை என்பது குறித்து தொடர்ந்து தனது கவலையைத் தெரிவித்து வந்தவர் ஹூசேன்.

அவரது உடல் அடக்கம் லண்டனிலேயே நடைபெறும் என்று தெரிகிறது.

No comments: