Thursday, June 16, 2011

பிரேமலதா விஜயகாந்த் சரணடைய நீதிமன்றம் உத்தரவு .



தேர்தல் பிரச்சார வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி 15 நாட்களுக்குள் அவரை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டார்.

நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது, மார்ச் 30 ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்து அதிக வாகனங்கள் சென்றது, விதிகளை மீறி அதிக நேரம் பேசியது , நெரிசலுக்கு காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, தாடிக்கொம்பு, செம்பட்டி ஆகிய காவல் நிலையத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இவ் வழக்குகளில் ஏற்கனவே அவருக்கு நீதி மன்றம் முன்ஜாமின் வழங்கியது. ஆனால், அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதனால், தனக்கு மீண்டும் முன்ஜாமின் கோரி பிரேமலதா சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.

No comments: