Saturday, May 7, 2011

உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் சுனாமி, நிலநடுக்கம்.


உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் சுனாமி, நிலநடுக்கம்: ஜப்பான் நாட்டு பெண் விஞ்ஞானி வேதனை

உலக வெப்பமயமாதல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட்டு மனித உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று ஜப்பான் நாட்டு பெண் விஞ்ஞானி கூறினார்.

மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், வனச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை மிதப்படுத்துதல்' பற்றிய ஒருநாள் கருத்தாய்வை நடத்தியது.

கருத்தாய்வில், கனடா நாட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானி ஆன்ட்ரு கோடன் கூறியதாவது:

உலகில் கனடாவில் வனவளம் அதிகமாக உள்ளது. கனடா வன வளங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் சிறப்பான முறையில் அமைந்து நிலவளம், நீர்வளம் பாதுகாக்கப்படுகிறது. வனவளங்களை பாதுகாக்கவும், உலக வெப்பமயமாதலை தடுக்கவும் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றிய ஆராய்ச்சிகளை இந்தியாவில் மேற்கொள்ள, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றார்.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானியும், ரெயின்போ குழந்தைகள் வனகூட்டுக்குழு அமைப்பின் தலைவருமான எமிகா காமினோமொரி கூறியதாவது:

இன்று உலகவெப்பமயமாதலை தடுப்பதின் மூலம், வனவளங்கள் மற்றும் மனித உயிர்கள் காப்பாற்றப்படும். வனச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை மிதப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை, இன்றைய தலைமுறையினரான குழந்தைகள் இடையே ஏற்படுத்த வேண்டும். ரெயின்போ அமைப்பு 9 நாடுகளில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

உலக வெப்பமயமாதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சுனாமி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்பட்டு மனித உயிர்இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உலக வெப்பமயமாதலை தடுக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றார்.

No comments: