Saturday, May 7, 2011

கனிமொழி - சரத்குமாரை சிறையில் அடைக்க வேண்டும் : சிபிஐ வாதம்.


கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்குதாரரும் டிபி ரியாலிட்டி தலைவருமான ஆசிப் பல்வா மூலம் தான் ரூ. 214 கோடி வந்துள்ளது. ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின்னர் தான், அந்தப் பணத்தை வட்டியோடு சேர்த்து கலைஞர் டிவி திருப்பித் தந்துள்ளது. முதலில் லஞ்சமாக வாங்கிய இந்தப் பணத்தை, கடனாக வாங்கியது போல காட்டி திருப்பித் தந்துள்ளனர்.

மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமாரை விட கனிமொழிக்குத் தான் ராசா நெருக்காக இருந்தார். ராசா தவறுகள் செய்ய கனிமொழியும் சரத்குமாரும் உதவியாக இருந்தனர். எனவே அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றார் சிபிஐ வழக்கறிஞர்.

நேற்று நீதிமன்ற விசாரணை முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய ராம்ஜேத்மலானி, குற்றப் பத்திரிகையில் பெயர் இடம் பெற்றதால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது. கலைஞர் டிவி நிறுவனத்தைப் பொருத்தவரை அனைத்து பணப் பரிமாற்றங்களும் காசோலைகள் மூலமே நடந்துள்ளன. எனவே, கருப்புப் பணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் சார்பில் நீதிமன்றத்தில் நேற்று வாதாடிய வழக்கறிஞர் அல்தாப் அகமது, சிபிஐ தாக்கல் செய்த முதல் குற்றப் பத்திரிகையில் கலைஞர் தொலைக்காட்சி பற்றி ஒரு இடத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. கலைஞர் தொலைக்காட்சி சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட நிறுவனம். இதற்கான நிதியை பல்வேறு ஆதாரங்களின் மூலம் திரட்ட உரிமை உண்டு.

200 கோடி ரூபாய் பணம் வர்த்தக ரீதியான பணப் பரிமாற்றமே தவிர வேறு ஏதும் இல்லை. அந்தப் பணம் முறைகேடான பணமா, இல்லையா என்பது எப்படித் தெரியும். அந்த 200 கோடி ரூபாய் பணமும் 10 சதவிகித வட்டியுடன் திருப்பி தரப்பட்டுவிட்டது. வணிக நிறுவனங்கள் மீது இப்படி தவறான வழக்குகளை தொடர்ந்தால் இந்தியா எப்படி வளர்ச்சி அடையும் என்றார்.

No comments: