Saturday, May 7, 2011

பின்லேடன் கூட்டாளிகள் ஜவாகிரி - முல்லா ஒமருக்கு அமெரிக்கா அடுத்த குறி.

பின்லேடன் கூட்டாளிகள் ஜவாகிரி - முல்லா ஒமருக்கு அமெரிக்கா அடுத்த குறி

அமெரிக்காவில் தேடப்பட்டு வந்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது. அத்துடன் பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் வேலை முடியவில்லை.

பின்லேடன் பாகிஸ்தானில் தான் தங்கியிருக்கிறார் என்று கூறி வந்த நிலையில் அவர் அங்கு இல்லை என அந்நாட்டு தலைவர்கள் மறுத்து வந்தனர். தற்போது பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் அவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்புடன் காத்து வந்தது தெரியவந்துள்ளது.

இது போன்று மேலும் பல தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது. குறிப்பாக, பின்லேடனின் கூட்டாளிகள், ஜவாகிரி, முல்லா ஒமர் ஆகியோர் பாகிஸ்தானின் ஆதரவுடன் அங்கு உலா வருவதாக நம்பபடுகிறது. இவர்களில் ஜவாகிரி அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் 2-வது தலைவர். முல்லா ஒமர் ஹக்கானி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர்.

பின்லேடன் கொல்லப்பட்டதால் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் தற்போது பலமிழந்து உள்ளது. அடுத்த கட்ட தலைவராக இருக்கும் ஜவாகிரியையும், முல்லா ஒமரையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்து விட்டால் அந்த இயக்கத்தை மேலும் பல வீனப்படுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

No comments: