
மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உடல்நிலை, தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, புட்டபர்த்தி, ஸ்ரீசத்யசாய் பாபாவிற்கு(85) கடந்த மார்ச் 28ம் தேதி திடீரென நுரையீரல் கோளாறு ஏற்பட்டதையடுத்து, மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர், புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்திகிராமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது, வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசிக்கும் சாய்பாபாவின் உடல்நிலை , கவலைக்கிடமாக இருப்பதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபாவின் முக்கிய உடல் உறுப்புகள் சிகிச்சை முறைகளை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இல்லை. அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment