அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளது என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளது அதிமுக கூட்டணியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். பணங்குடி கிராமத்தில் பிரச்சாரம் செய்து பேசிய விஜயகாந்த்,
இன்றைக்கு அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெயில்ல இருக்கிறார். ஆக அண்ணா திமுக கொள்கையே ஜெயில்ல இருக்கு. நான் தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கேன் என நினைக்கிறேன் என்றார்.
விஜயகாந்த்தின் பேச்சுக்கள், செயல்பாடுகள் நாளுக்கு நாள் குழப்பமாகி வருகின்றன. தர்மபுரியில் தனது கட்சி வேட்பாளரையே போட்டு அடித்தார். தற்போது தவறுதலாக பேசி மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
திமுக கொள்கைகள் இன்று சிறையில் உள்ளன, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று கூறுவதற்குப் பதிலாக, அதிமுக கொள்கைகள் சிறையில் உள்ளன, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் ராஜா சிறையில் உள்ளார் என்று என்று கூறியதால் கூடியிருந்த அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என விஜயகாந்த் பேசியபோது, தேமுதிகவினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிலையில் வேனுக்குள் இருந்த யாரோ, கீழே இருந்தபடி விஜயகாந்த்தை அழைத்து அவர் தவறாகப் பேசியதை சுட்டிக் காட்டினர்.
இதையடுத்து சற்று நேரம் பேச்சை நிறுத்திய விஜயகாந்த், நான் தப்புத் தப்பாக பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு காரணம், இந்த சத்தம்தான் என்று கூறியபடி அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார். பின்னர் அவர் தொடர்ந்து பேசினார்.
தர்மபுரியில் சொந்த கட்சி வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு அடங்குவதற்குள், தன்னுடைய கட்சிக்குத்தான் பிரச்சாரம் செய்ய வந்துள்ளதாகவும், அதிமுக கொடிகளை கீழே இறக்குமாறும் அரியலூரில் விஜயகாந்த் பேசிய வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிமுக தொண்டர்களை கொதிப்படைய செய்தது.
இந்நிலையில் அண்ணா திமுக கொள்கை ஜெயில்ல இருக்கிறது என்று விஜயகாந்த் பேசிய வீடியோ வெளியாகி இருப்பது, அதிமுக தலைமையை கொதிப்படையச் செய்துள்ளது.
இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் குழப்பமும், அதிருப்தியும் அடைந்தனர்.

4 comments:
Video Enkkappaaaaaaa!!!!!!!! Video please !!!!!
Nanri
Maharaja
//அங்கு கூடியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து நாக்கை துறுத்தியபடி கண்டித்தார்//
ஆஹா..ஆஹா.. கலைகட்டிடுச்சே! விஸ்கிகாந்த் வால்க. காணொலி எங்கேப்பா?
பதிவர்களே, ஜாக்கிரதை.விஜயகாந்த் தனிமனிதர் இல்லை அவருக்குள் பல நெப்போலியன்கள் ஊறிக்கிடக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மீறிக்கலாய்த்தால் நீங்கள் சைடுடிஷ் ஆக ஆக்கப்படுவீர்கள்.
அந்த எம் ஜி யாரைப் பழி வாங்கிய மோஹினிப் பிசாசை இந்த எம் ஜி ஆர் பழி வாங்க வந்துள்ளார
அவர் உடல் மேல் செருப்புக்காலுடன் ஏறித் தாண்டி அடி வாங்கிய அம்மாமியை இவர் உம்மாச்சி காட்டுகின்றார்.
Post a Comment