Monday, April 4, 2011

கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் - விஜயகாந்த் ஆத்திரம்.

நாகர்கோவில், கத்தாதீங்க நான் குழம்பிடுவேன் என குமரி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆத்திரமடைந்தார். தொடர்ந்து கூச்சல் போட்ட தொண்டரையும் அவர் கூட்டத்தில் இருந்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் போட்டியிடும் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார். குலசேகரத்தில் இருந்து அவர் பிரசாரத்தை துவங்கினார்.

மனித நேயம், அன்பு அனைவருக்கும் அவசியம். பகவத் கீதை, பைபிள், குர் ஆன் ஆகிய மூன்றும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. வேட்பாளர் யார், அவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் அதுதான் முக்கியம்.

மக்கள், தொண்டர்கள் விரும்பியதால் அதி்முகவுடன் கூட்டணி வைத்தேன். எனது மானசீக குரு எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்திருக்கிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என கூட்டணி வைத்துள்ளேன். அதிமுக கூட்டணிக்கு நீங்கள் வெற்றியைத் தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தக்கலையில் கூச்சல், குழப்பம்!

தக்கலையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கூச்சல் போட்டனர். அப்போது ஆத்திரமடைந்த விஜயகாந்த் கத்தாதீங்க, நான் குழம்பிடுவேன். கொடியை இறக்கிக் காட்டுங்கள் என்றார்.

வடசேரி அண்ணா சிலை அருகே பேசுகையில், நான் பேசுவதை கேட்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நீங்க போடுற சத்தத்தை கேட்க நான் வரவில்லை. சத்தம் போட்டீர்கள் என்றால் வேனில் இருந்து நான்கீழே இறங்கிடுவேன். நீங்க எல்லோரும் வேனுக்கு வந்து பேசுங்கள் என்றார்.

2 comments:

Thamizhan said...

சேராத இடந்தன்னில் சேர வேண்டாம் !

அய்யோ பாவம், அ தி மு க வோட சேர்ந்த நேரம் வியாதி முத்திடுத்து.

அவா என்ன செய்யப் போராளோ !

அவா வந்தா இவா நேரே புழலுக்குத்தான் பொப்போறா!

அய்யோ பிரேமலதா போய் அவா கால்ல விழுந்துடு !

எனது கவிதைகள்... said...

இதுபோல் பேசுவது நல்ல தலைவராக வர நினைப்பவருக்கு அழகல்ல!


உண்மைவிரும்பி.
மும்பை.