Monday, April 18, 2011

கேரளாவில் 7 மணி நேரத்தில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை.


கேரளாவில் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் வெறும் 7 மணி நேரத்தில் ரூ. 21 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.


கேரளாவில் கடந்த 13-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 11-ம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. தேர்தல் காரணமாக 11-ம் தேதி மாலை 5 மணியிலிருந்து 2 நாட்களுக்கு கேரளாவில் உள்ள அனைத்து மது கடைகளையும் மூடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


இதனால் மது பிரியர்கள் 11-ம் தேதி காலையிலேயே மது கடைகள் முன்பு குவிந்ததால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக கடைகள் காலை 10 மணிக்குதான் திறக்கப்படும். ஆனால் காலை 8 மணிக்கே கடைகள் முன்பு நீண்ட வரி்சை காணப்பட்டது. அன்று காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணிக்குள் ரூ.21 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.



2010-11 நிதியாண்டில் மட்டும் கேரளாவில் ரூ.6 ஆயிரத்து 730 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட ரூ.1130 கோடி அதிகம் ஆகும்.


No comments: