Monday, August 15, 2011

ஸ்டெம் செல்கள் சிகிச்சை முறையில் புதிய மைல்கல் : பார்வை இழப்பு சரிசெய்யப்படும் .



ஸ்டெம் செல்கள் சிகிச்சையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் முதல்முறையாக மனிதனிடம் சோதனை அடிப்படையில் அந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு அதன்படி பார்வை இழப்பு, பார்வை குறைபாடு தொடர்பான நோய்கள் சரிசெய்யப்பட இருக்கின்றன. ஆய்வின் முதல் முயற்சியாக, பரம்பரை வழியாக பார்வை இழப்பு ஏற்படும் இளவயது ஆண்கள் மற்றும் பெண்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

அவர்களின் கண்களில் எம்பிரியோனிக் ஸ்டெம் செல்கள் உட்செலுத்தப்படுகின்றன. அதே போல் அடுத்த வருடம், வயதானவர்களுக்கு ஏற்படும் வயது தொடர்பான மெகுலர் டிஜெனரேஷன் என்ற ஒரு வகை பார்வை இழப்பு தொடர்பாக வயது முதிர்ந்தவர்களிடம் சோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சோதனை முதல் கட்டமாக அமெரிக்காவிலும், அதனை தொடர்ந்து இங்கிலாந்திலும் நடைபெறும். இது பற்றி ஆராய்ச்சியாளர் ராபர்ட் லான்சா கூறும் போது, உலகில் முதல்முறையாக ஸ்டெம் செல்கள் உதவியுடன் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்த செல்கள் உடலில் உள்ள மற்ற செல்வகைக்கு உருமாறி பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்யும் பணியினை செய்யும். இந்த சிகிச்சை முறை எங்களுக்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வை குறைபாடு 3 லட்சமாக இங்கிலாந்தில் உள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை இன்னும் 25 வருடங்களில் 10 லட்சமாக உயரும் என கூறப்படுகிறது.

No comments: