Monday, August 15, 2011

சேலம் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் டிஸ்மிஸ்.



சேலம் பள்ளப்பட்டி போலீஸ் நிலைய முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மீது சேலம் 5ரோடு ரோலர் பிளவர் மில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டது. இதன் மீது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இதனால் லட்சுமணன் போலீசில் சரண் அடைந்து வாக்குமூலம் கொடுத்தார்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் வந்தார். அப்போது லட்சுமணனை சேலம் சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். சூரமங்கலத்தை சேர்ந்த அருள் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 387 (மிரட்டி பறித்தல்), 389 ( தொடர்ந்து அச்சுறுத்தி பறித்தல்), 506 (2) கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னர் லட்சுமணன் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே லட்சுமணன் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் வக்கீல்கள் அவருக்கு ஜாமீன் கேட்டு சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். ,இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இதை நீதிபதி பாஸ்கரன் விசாரிக்கிறார். அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக அருண்குமார் வாதிட உள்ளார். இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்காக வக்கீல் ஏ.எஸ்.அன்பு வாதிடுகிறார்.

No comments: