பிருஷ்டகோணாசனம்.

செய்முறை:
இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். கைகளிரண்டையும் பின்னால் சரிக்கவும். வலதுகாலை தூக்கி, இடதுபக்கம் போடுங்கள்.
அடுத்தபடியாக, இடக்காலை தூக்கி வலப்பக்கம் வையுங்கள். இரண்டு நிலையிலும் இயல்பான சுவாசம், அமலில் இருக்கட்டும்.
பயன்கள்:
பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு, மகப்பேறுக்கு பின் அடிவயிறு பெருத்தல், கர்ப்பப்பை இறக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.
ஜானுசீராசனம்.

செய்முறை:
இருகால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காருங்கள். இடதுகாலை மடக்கி, வலது அடித்தொடையில் படியுமாறு, உடலோடு ஒட்டி வைக்கவும். முழங்கால் தரையோடு தரையாக படிந்திருக்கவேண்டும்.
இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கியநிலையில், முன்னோக்கி குனியுங்கள். இதற்குள் வலதுகாலை கொண்டுவரவும். நெற்றியால் வலது முழங்காலைத் தொடுங்கள். அடுத்தபடியாக ஆசனத்தை கலைத்து, இடப்பக்கம் மாற்றி செய்யவும்.
பயன்கள்:
கால் பிடிப்பு, வாதம், மூட்டு வலி நீங்கும். இடுப்பு பிடிப்பு, முழங்கால் வீக்கம் நீங்கும். நரம்பில் கெட்ட ரத்தம் கட்டுதல் (வெரிகோஸ் வெயின்) நோய் வராது.
பரிவர்த்தன ஜானுசீராசனம்.

செய்முறை:
இரண்டு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்காரவும். இடது பாதத்தை மடக்கி, வலது அடித்தொடையில் பதியவைக்கவும். இடுப்புக்கு மேல்பகுதியை வளைத்து, நீட்டிய வலதுகாலை கோர்த்த கைகளால் பிடியுங்கள். அப்போது உங்களின் பார்வை,மேல் நோக்கிய நிலையில் இருக்கட்டும். அடுத்தபடியாக-பக்கம் மாற்றியும், இதேபோல் செய்யுங்கள்.
பயன்கள்:
குண்டானவர்களுக்கு மெலிவு கிட்டும். மார்பு விரியும். மூச்சு சம்பந்தமான நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, முதுகு- எலும்பு வலி போகும். பெருத்த இடை, சிறுத்த மார்பகம் உள்ள கன்னிகளுக்கு மிகவும் அவசியமான ஆசனம்.
மகாமுத்ரா.

செய்முறை:
முழங்காலை மடக்கி மண்டியிட்டு உட்காரவும். இரு கைகளையும் பின்னால் கொண்டுபோகவும். உங்களின் இடது மணிக்கட்டை, வலதுகை பிடித்திருக்கட்டும். சற்றே முன்னோக்கி குனிந்து நெற்றியால், முழங்காலுக்கு முன்பாக உள்ள தரையை தொடுங்கள். கவனம், இரு முழங்காலும் சேர்ந்தே இருக்கவேண்டும். இயல்பான சுவாசத்தில் 20 விநாடிகள் இருந்து, ஆசனத்தைக் கலைத்துவிடலாம்.
பயன்கள்:
குதி கால் வலி, முழங்கால் பிடிப்பு, முதுகு - எலும்பு வலி, பெருந்தொந்தி, வாயுத்தொல்லை நீங்கும்.
No comments:
Post a Comment