Saturday, August 20, 2011

ஜிப்பான்கள் தாவிக்குதிக்கும் ரகசியம் .



குரங்குகள் பலவிதம். ஏப் இனத்தை சேர்ந்த ஜிப்பான் என்பது ஒரு வகை குரங்கு. இவற்றின் கைகள் வெள்ளையாக இருப்பதனால் இது வெள்ளைக்கை ஜிப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஜிப்பான்கள் தரையிலிருந்து மேலெழும்பி சுமார் 3 மீட்டர் உயரம் தாவிக்குதிக்கும் திறன் பெற்றது.

மனிதர்களுக்கு உடம்பில் 11 சதவீதம் கைகளின் எடை. ஆனால், ஜிப்பான்களுக்கு இது 17 சதவீதமாம். எனவே, தங்களது பலம் வாய்ந்த கைகளை அசைத்து, வீசி ஒரு அசுர பலத்தை ஏற்படுத்தி இவை தாவிக்குதிக்கின்றன. அப்படி செய்யும் போது அவற்றின் உடல் எடையின் புவி மையம் கைகளுக்கு வந்து விடுகிறதாம். அதுவே இவை இவ்வளவு உயரம் தாவிக்குதிப்பதற்கு தேவையான சக்தியை தருகிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

ஃப்ளீ என்பது ஒரு வகையான ஒட்டுண்ணிகள். இவை 1.5 மில்லி மீட்டரிலிருந்து 3.3 மில்லி மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. ஆனால், ஆச்சரியமாக இவை தங்களது உடலின் நீளத்தை விட 200 மடங்கு தூரத்தை அதாவது, 18 செ மீ உயரத்தை அல்லது 33 செ மீ நீளத்தை, ஒரே தாவலில் தாவி விடும். மிக அதிக உயரம் துள்ளிக்குதிக்கும் உயிரினம் இது தான்.

பொதுவாக நீண்ட தூரம் தாவிக்குதிக்கும் பிற உயிரினங்கள் வெட்டுக்கிளி மற்றும் ஃப்ளீ. ஆனால், இவை தாவிக்குதிப்பதற்கும் இந்த ஜிப்பான்கள் தாவிக்குதிப்பதற்கும் நிறைய வித்தியாசமிருப்பதாக இவற்றை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

No comments: