Saturday, July 30, 2011

வீரபாண்டி ஆறுமுகம் இன்று மீண்டும் கைது.



காவல் நிலையத்துக்கு கையெழுத்து போடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை மீண்டும் கைது செய்த போலீசார்.

அங்கமாள் நகர் மற்றும் பிரிமியர் மில் நில அபகரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 25.07.2011 மற்றும் 26.07.2011, 27.07.2011 ஆகிய மூன்று நாட்களும் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

மூன்று நாட்கள் போலீஸ் விசாரணைக்கு உட்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம், 27ஆம் தேதி மாலை நீதிமன்றத்தால் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்ற மறு உத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் கையொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையுடன் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 30.07.2011 இன்று காலை 8 மணிக்கு குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கையொப்பம் இடச் சென்ற வீரபாண்டி ஆறுமுகத்தை, வேறொரு வழக்கில் மீண்டும் கைது செய்தனர்.

போலீசார் வீரபாண்டி ஆறுமுகத்தை வெளியே அழைத்துக் கொண்டு சென்று உள்ளார்கள்.

இன்று நீதிமன்ற விடுமுறையாக இருப்பதால், நீதிபதியின் வீட்டுக்கு அவரை காவல் நீடிப்பு செய்ய அழைத்துச்சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.

No comments: