Sunday, April 3, 2011

ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்க வேண்டியுள்ளது - விஜயகாந்த்.


திமுகவினரின் வாயில் வலிய போய் விழுந்து கொண்டிருக்கிறார் விஜயகாந்த். லேட்டஸ்டாக அவங்களுக்கு ஆப்படிக்க, ஆஃப் அடிச்சாதான் சரியா வரும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜயகாந்த்தை தனது பிரசாரக் கூட்டங்களிலெல்லாம் தாறுமாறாக விமர்சித்து வருகிறார் வடிவேலு. விஜயகாந்த்தை லூஸு, குடிகாரன் என்றெல்லாம் பேசி வருகிறார். டம்மி பீஸ் என்கிறார்,

இந்த நிலையில் விஜயகாந்த்தும் தன் பங்குக்கு திமுகவினர் மற்றும் ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாயில் வலிய வந்து சிக்கிக் கொள்கிறார். சமீபத்தில், தர்மபுரியில் நடந்த பிரசாரத்தின் போது சொந்தக் கட்சி வேட்பாளரையே போட்டுஅடித்து விட்டார் விஜயகாந்த். இதை விடிய விடிய ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் டிவிகளில் காட்டி விஜயகாந்த்தை நாறடித்து விட்டனர்.

இந்த நிலையில் விஜயகாந்த் அவராகவே ஆளுங்கட்சிக் கூட்டணியினரின் வாய்கள் மெல்வதற்கு அவலைக் கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக தர்மத்துப்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது விஜயகாந்த், ‘நானாவது எந்த பதவியும் வேண்டாம்னு சொல்லிவிட்டு வெய்யிலில் சுத்துறேன். அவுங்க வர்றாங்களா. 4 , 5 மணிக்கு மேல வந்து டேய் கருப்பா, டேய் மாடசாமி என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு ஆப்பு அடிக்க ஆஃப் அடிக்க வேண்டியுள்ளது - என்ன செய்வது என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு, அரசியல் அரங்கில் பரபரப்பிற்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது மது அருந்த வேண்டியுள்ளது. என்பதை மிக வெளிப்படையாக கூறியுள்ளார். அப்போது தான் தன்னால் பேச முடியும் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளார்.

ஒரு தேர்தலில் வாக்கு சேகரிக்க என்ன பேசவேண்டுமோ அதை விட்டுவிட்டு தேவையற்ற வார்த்தைகளை நிதானமின்றி உளறிவருகிறார் விஜயகாந்த். என்றே எண்ணத் தோன்றுகிறது.

No comments: