Sunday, April 3, 2011

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு கோடிக்கணக்கில் பரிசுகள்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பரிசுகள் குவிய ஆரம்பித்துள்ளன. கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு தலா ரூ. 1கோடி பரிசளித்துள்ளது. இதுபோல டெல்லி அரசு, உத்தரகாண்ட் அரசு ஆகியவையும் பரிசுகளை அறிவித்துள்ளன.
Indian Cricket Team
Getty Images
உலகக் கோ்பைபப் போட்டியிந் இறுதியாட்டம் முடிந்த சில விநாடிகளிலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் தனது பரிசு குறித்த அறிவிப்பை ரவி சாஸ்திரி மூலம் வெளியிட்டது. அதன்படி வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும் என வாரியத் தலைவர் சஷாங்க் மனோகர் அறிவித்தார். அதேபோல அணி பயிற்சியாளர் கிர்ஸ்டன், உதவி பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் வழங்கப்படும். அணித் தேர்வாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசாக தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

டோணிக்கு டெல்லி அரசு ரூ. 2 கோடி

அதேபோல டெல்லி அரசும் பரிசுகளை அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு ரூ. 2 கோடி பரிசாக அளிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அதேபோல டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் கெளதம் கம்பீர், வீரேந்திர ஷேவாக், விராத் கோலி, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ. 1 கோடி பரிசாக அளிக்கப்படும்.

டோணி, சச்சினுக்கு முசெளரியில் வீடு

உத்தரகாண்ட் மாநிலம் விருதுகளையும், பரிசையும் அறிவித்துள்ளது. கேப்டன் டோணிக்கு உத்தரகாண்ட் ரத்னா விருதை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேபோல டோணிக்கும், சச்சினுக்கும் முசெளரியில் வீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தோற்றிருந்தால் என்னை வறுத்தெடுத்திருப்பார்கள் - டோணி.

ஒருவேளை இறுதிப் போட்டியில் இந்தியா மட்டும் தோற்றிருந்தால், என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்திருப்பார்கள் என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.
Suresh Raina, MS Dhoni and Harbajan Singh
Getty Images
கபில்தேவுக்கு அடுத்து இந்தியாவின் சிறந்த கேப்டனாக உருவெடுத்து விட்டார் டோணி. கங்குலியால் வென்று தர முடியாமல் போன உலகக் கோப்பையை டோணி வென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் உயரிய இடத்தைப் பிடித்துள்ளார்.

இருப்பினும் நேற்றைய போட்டியின்போது டோணியின் சில முடிவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அத்தோடு மட்டுமல்லாமல், தப்பு செய்கிறாரே டோணி என்ற விமர்சனமும் கூட எழுந்தது. ஆனால் இந்தியா பெற்ற வெற்றியும், டோணி ஆடிய ஆட்டமும் அத்தனையையும் துடைத்துப் போட்டு விட்டது.

இருந்தாலும் தன்னை நோக்கி எழுந்த, விஸ்வரூபம் எடுக்கக் காத்திருந்த ஏவுகணைகள் குறித்து டோணியும் அறிந்தே வைத்திருந்தார் போலும். போட்டியின் முடிவில் இதுகுறித்து அவரே குறிப்பிட்டார்.

டோணி கூறுகையில், இன்றைய போட்டி எனக்கு மிகக் கடுமையான ஒன்று. போட்டித் தொடர் முழுவதும் யுவராஜ் சிங் அபாரமாக ஆடி வந்தார். நல்ல பார்மிலும் அவர் உள்ளார். இந்த நிலையில் அவருக்குப் பதில் நான் களம் இறங்கியது பல கேள்விகளை எழுப்பும் என்பதை நான் அறிவேன். இருப்பினும் அந்த நேரத்தில் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன்.

ஒருவேளை எனது முடிவு தவறாகப் போயிருந்தால், நான் சரியாக ஆடாமல் போயிருந்தால் நிச்சயம் நான் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பேன்.

ஆனால் நான் எடுத்த முடிவு சரியானதே. எனது முடிவை கிர்ஸ்ட்னும் கூட ஆதரித்தார். ஒரு வேளை நான் முன்னரே பேட் செய்யாமல் போயிருந்தால் அடுத்தடுத்து இடது கை வீரர்களாக மாறியிருக்கும். கம்பீர், யுவராஜ், சுரேஷ் ரெய்னா என தொடர்ந்து இடது கை ஆட்டக்காரர்களாக களம் இறங்கியிருப்பார்கள். அது பெரிய ரிஸ்க்காகவும் மாறியிருக்கும்.

மேலும், இலங்கை அப்போது ஸ்பின்னர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் நான் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும் என கருதி அந்த முடிவை எடுத்தேன். அது சரியானதாகவே இருந்தது.

அதேபோல இன்னும் கூட நிறைய கேள்விகளுடன் பலரும் காத்திருந்தனர். ஏன் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஏன் ஸ்ரீசாந்த்தை சேர்த்தீர்கள் என்பது போல பல கேள்விகள் உள்ளன. ஆனால் நாம் கோப்பையை வென்று விட்டோம். எனவே இந்த கேள்விகளுக்கு இப்போது இடமில்லை என்று நான் கருதுகிறேன்.

முரளிதரனின் பந்து வீச்சை நான் வெற்றிகரமாக சந்தித்தேன். நான் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸில் இடம் பெற்றிருந்த முரளிதரனுடன் விளையாடியது உபயோகமாக இருந்தது. அவரது தூஸ்ரா வித்தைகளை நெருக்கமாக இருந்து பார்க்க முடிந்தது. அவரது பந்து வீச்சின் ரகசியத்தையும் அறிய முடிந்தது. எனக்குத் தெரியும் என்பது அவருக்கும் தெரியும். எனவேதான் இறுதிப் போட்டியில் அவரது பந்துகளை என்னால் எளிதில் அடிக்க முடிந்தது.

நானும் கம்பீரும் சேர்ந்து நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து ஆடினோம், நிலைத்து ஆடினோம், சிறப்பாக ஆடினோம். ரிஸ்க்கான ஷாட்கள் வேண்டாம் என்று முடிவு செய்து அதற்கேற்ப ஆடினோம். அதற்கு நல்ல பலன் இருந்தது என்றார் டோணி.

உலகக் கோப்பையை நாட்டிற்கும், சச்சினுக்கும் அர்ப்பணித்த அணி,
கனவு மெய்ப்பட்டது.

கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி அதை நாட்டிற்கும், சச்சின் டெண்டுல்கருக்கும் அர்ப்பணி்த்தது.
Indian Players
Getty Images
கோப்பையை வென்றவுடன் இந்திய அணி வீரர்கள் சச்சினை தங்கள் தோளில் வைத்து மைதானத்தில் வலம் வந்தனர். தங்களுக்கு போராதரவு அளித்த ரசிகர்களுக்கும், சச்சினுக்கும் வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

உலகக் கோப்பை என்பது ஒரு பெரிய விஷயம், இன்று நாங்கள் வென்றுவிட்டோம். இதை சச்சினுக்கு கொடுக்கிறோம். இது நான் விளையாடிய 3-வது உலகக் கோப்பை. இறைவனுக்கு நன்றி என்று ஆனந்தக் கண்ணீருடன் கூறினார் ஹர்பஜன் சிங்.

நான் விளையாடிய முதல் உலகக் கோப்பையிலேயே வெற்றி பெற்றுவிட்டோம். இதைவிட வேறு என்ன வேண்டும். இநத கோப்பையை இந்திய மக்களுக்கு அளிக்கிறோம். சச்சின் கடந்த 21 வருடங்களாக சுமையை தன் தோளில் சுமந்தார் இன்று நாங்கள் அவரை தோளில் வைத்து கொண்டாடினோம் என்றார் விராத் கோலி.

இதை நம்ப முடியவில்லை. இந்தியாவிற்காகவும், சச்சினுக்காகவும் இந்த உலகக் கோப்பையை எங்கள் அணி வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. இதை சொல்ல வார்த்தையே இல்லை என்றார் வெற்றி பெற்றவுடன் ஆனந்தக் கண்ணீர் விட்ட யுவராஜ் சிங்.

இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகமாக 21 விக்கெட் எடுத்தவர்கள் ஜாஹிர் கானும், பாகிஸ்தான் கேப்டன் ஷஹித் அப்ரிடியும் தான். நாங்கள் இந்த கோப்பையை வென்றே தீர வேண்டும் என்றிருந்தோம். நாங்கள் சச்சினுக்காக சந்தோஷப்படுகிறோம். அவர் நாட்டிற்காக எவ்வளவோ செய்திருக்கிறார். இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஜாஹிர் கான்.

நேற்றைய ஆட்டத்தில் 97 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தவர் கௌதம் கம்பீர். எங்கள் கனவு நனவாகிவிட்டது. அனைத்து பெருமையும் சச்சினுக்கு தான். அவருக்காக நாங்கள் விளையாடினோம் என்றார் கம்பீர்.


No comments: