Sunday, April 3, 2011

சின்னக் கவுண்டர் வழங்கும் ரோஷக்காரன் தா.பாண்டியன்.

ஐந்து வருசம் மத்தியில அன்புமணி சுகாதரத்துறை அமைச்சராக இருந்தாரே, அப்போது ஏன் வன்னியர்களுக்கு வேலை வாங்கி தரவில்லை என ராமதாசிடம் கேட்கிறார் விஜயகாந்த். என் பெயரை அவரை சொல்லச் சொல்லுங்க அவரு பேரயும் நான் சொல்றேன் என்கிறார் விஜயகாந்த். இந்த விளையாட்டு முடிவதற்கு முன்னரே நல்ல போதையில் இருந்த கேப்டன் தேமுதிக ஆள் ஒருவரை அடிக்கவும் தவறவில்லை.

என்ன போராட்டம் பண்ணி எல்லா சிறைக்கும் ராமதாசு போனார். மரம் வெட்டிப் போட்டதெல்லாம் ஒரு போராட்டமா? என்று சொன்ன கேப்டன், வட மாவட்டங்களில் வன்னியர், பறையர் மோதல்களை தூண்டிவிட்டு குளிர் காய்பவர்கள் (ராமதாசு, திருமா) அது வளர்க்கும் சாதி தீக்கே பலியாவார்கள் என்றும் சாபம் விடத் தொடங்கினார். ராமதாசு வந்தால் வன்னியருக்குச் செய்வார் விஜயகாந்த் வந்தால் நாயக்கருக்கு செய்வார் என்றால் என்ன ம......க்கு இவர்கள் மற்ற சாதிகளிடம் வாக்கு கேட்க வருகிறார்கள். மற்ற சாதிகளும் என்ன மசிருக்கு ஓட்டுப் போடப் போகிறார்கள். இதெல்லாம் தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா ?

நடிகரை நடிகர் என்று சொல்லாமல் சின்னக் கவுண்டர் சுகன்யா போல என்ன நாயக்கரே என்றா சொல்ல வேண்டும் என விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். இல்ல டைட்டில் சாங்க் போட்டு கண்ணு பட போகுதய்யா சின்ன நாயக்கரே என்று பாட வேண்டும் என எதிர்பார்க்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் ஏற்கெனவே வர்ணம் என்று சாதிய பிரிச்சுப் பேசாதீங்க என திரைப்பட விழாவில் பேசியவர் விஜயகாந்த். திராவிட இயக்கத்தின் பெயரைத் தாங்கி நிற்கும் அவரது கட்சித் தலைமையும், கூட்டணிக் கட்சித் தலைமையும் பெரியாரைத் தெரியாமல் அல்லது சாதி வரலாற்றைத் தெரியாமல் பேசிக் கொண்டிருப்பதால் இதுபோன்ற காமடிகளையும் தவிர்க்க இயலாதுதான்.

சின்னக்கவுண்டர் கதையை மிஞ்சி நிற்கிறது தேவர் தா.பாண்டியன் கதை. அவர்களது மாவட்ட செயலர் ஒருவரை இப்போது கட்சியை விட்டு நீக்கியது காமடியாகி விட்டது. தளி தொகுதியில் போட்டி வேட்பாளராக களமிறங்கி அதிலும் விருப்பமின்றி திமுக விற்கு தாவினார் அவர்களது முன்னாள் மா.செயலர். அவர் சும்மா போகாமல் தா.பா காசு வாங்கி வேட்பாளர்களை தேர்வு செய்கிறார் என்று போட்டு கொடுத்துவிட்டுப் போய்விட்டார். தா.பா வோட தவளை வாய் சும்மா இருக்காம நாங்க எல்லாம் போராட்டம் நடத்தித்தான் சிறைக்கு போனவர்கள். செங்கொடி இயக்கத்தில் ஊழல் பண்ணி யாரும் போனதில்லை என்று அடித்துவிட்டார். கேரளத்தின் சிபிஎம் தோழர் பிரணாய் விஜயனை அப்புறம் திருப்பூர் கோவிந்தசாமியை மனதில் வைத்துதான் வாரிவிட்டார் என்றும் தெரியவே பேச்சை கவனித்தேன்.

நான்கு ஆண்டுகளாக யாரை எதிர்த்து அரசியல் நடத்தினோமோ அந்தக் கட்சியிலேயே சேர்ந்துவிட்ட பிறகுதான் அவரது அரசியல் கண்ணோட்டமே நமக்கு இப்போது புரிகிறது என்றார் தா.பா. ஆனாலும் பக்கத்தில் இருந்த மகேந்திரனுக்கு இதெல்லாம் சுருக்கெனக் குத்தியதாகத் தெரியவில்லை. ஆனாலும் விட்டாரா பாருங்கள். இரண்டு கட்சியும் இலவசத்தை வழங்குவதற்காக கடன் வாங்குகின்றன அதற்கு வட்டி கூட கட்டுவதில்லை என்றார். மகேந்திரன் நெற்றியை சுருக்க ஆரம்பித்தார். உடனே சுதாரித்த தா.பா ஆனாலும் ஜப்பானது அனுபவத்தை உட்செறித்துக் கொண்ட அம்மா பசுமைக்குடில்கள் போல வீடு அமைக்கப் போகிறார் என்பதை வேண்டுமானால் வரவேற்கலாம் என்றார். திமுக வில் சேர்ந்த அந்த மாவட்ட செயலர் சொல்வதற்கும் இவர் சொல்வதற்கும் உள்ள மயிரிழை வேறுபாட்டை யார் கண்டறிந்து சொல்வது எனத் தெரியவில்லை.

என்னங்க இது? விஜயகாந்த பேச ஆரம்பித்து கம்யூனிஸ்டுகள தாக்க ஆரம்பிச்சிட்டீங்க என்கிறீர்களா? வடிவேலு தாங்க நம்ம ஆஸ்தான நடிகன். சின்னக்கவுண்டர் வேடத்தில் திருட்டுப்பயலை அறிமுகம் செய்த அவர், இருந்த கட்சியில் இருந்தே இன்னொரு கட்சிக்குத் தாவுவதில் மன்னனான தா.பா வையும் கைப்புள்ள கேரக்டரில் கலாய்த்தும் இருக்கிறார். என்ன ஒரு வித்தியாசம் என்றால் தா.பாவை படத்தில் நல்லா கலாய்த்த வடிவேலு கேப்டன பார்த்த இடத்திலெல்லாம் போட்டுத் தாக்குறாரு. தா.பா இதை மட்டும் பேசவில்லை. அவர் கம்யூனிசத்தை ஏ.எம்.கே.விடம் ஜூனியராக இருந்தபோதே படித்தவர் இல்லையா ? அதனால்தான் சொன்னார், தேர்தல் ஆணையம் எடுக்கும் கெடுபிடியான முயற்சிகளை ஆதரிக்கிறேன். ஆனால் இதனை அமல் செய்பவர்கள் போன ஆட்சியால் நியமிக்கப்பட்டவர்கள்தானே !

அட, ஒரு கம்யூனிஸ்டு வாயில இருந்து இப்படி பேச வருமா என நினைக்கிறீர்களா ? தேர்தல் ஆணையத்தை கலைஞர் குறைசொல்வது அல்லது கலெக்டர் சகாயத்தை அழகிரி குறைசொல்வதை அதனுடைய அரசியலை எல்லாம் போட்டுத் தாக்குவது தேவைதான். ஆனால் 100 சதவீதம் ஓட்டுப்போட மக்களை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் மாணவர்களைப் பயன்படுத்தப் போகிறதாம். மாணவர்கள் படிப்பு கெடும் என்றெல்லாம் சிபிஎம் போல சிந்திப்பதை விட ஜனநாயக நாட்டில் ஓட்டுப் போடாமல் இருப்பது கூட ஒரு ஜனநாய உரிமைதானே என்பதும் அதனைப் பறித்து கட்டாயம் ஓட்டுப்போடணும் மறுத்துப் பேசினா உங்கள எல்லாம் சவுதிக்கு நாடு கடத்துனாத்தான் தெரியும்டா என்கிறது விஜயகாந்த் ரசிகர் பட்டாளம். அந்த அலைவரிசையில் தா.பா வும் வழக்கினை அதாங்க ஜனநாயகத்தை பிராக்டீஸ் செய்கிறார் போலும். தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் வேலையை விட்டுவிட்டு அடுத்த 5 ஆண்டுகளும் நாங்க சொல்ற யாரு மேலயாவது கட்டாயம் நம்பிக்கை வச்சே ஆக வேண்டும் என பிரச்சாரம் செய்வதை தடுக்க அதன் வழியாக உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும். இருபுறமும் யாரும் இல்லை. ஆம் பிரச்சாரத்தை பிரச்சாரத்தாலே முறியடிப்போம்.

powrnamy.blogspot.com

No comments: