Friday, July 8, 2011

சொத்துக்காக தாய், தந்தையைக் கொன்று செப்டிக் டேங்கில் போட்ட எஸ்.ஐ. கைது.

சொத்து உடனே வேண்டும் என்பதற்காக தாய்-தந்தையை தலையணையால் அமுக்கி கொன்று நாடகமாடினேன்;  சப்-இன்ஸ்பெக்டர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை கௌத்தூர் காந்திநகர் புத்தகரத்தை சேர்ந்தவர் ஜார்ஜ்வில்லியம், சென்னை கொரட்டூரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை லோகநாதன், சென்னை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தாயர் சிந்தாமணி 2 பேரும் ஆம்பூர் பெத்தலகேம் 7-வது தெருவில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் ஆம்பூர் வந்த ஜார்ஜ், அங்குள்ள காவல் நிலையத்தை அணுகி, தனது வீட்டு செப்டிக் டேங்க்கில் ஒரு ஆண், பெண் மண்டை ஓடுகள் இருப்பதாக கூறினார். இதையடுத்து ஓடி வந்த போலீஸார் பார்த்தபோது, டேங்க்கில் இரண்டு எலும்புக் கூடுகள் கிடப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். அதை மீட்டு விசாரணை நடத்தியபோது அது ஜார்ஜின் தந்தை, தாய் என்பது தெரிய வந்தது.

இவர்களை கடந்த ஆண்டு ஜூன்12-ந்தேதி முதல் காணவில்லை. என்று ஜார்ஜ் வில்லியம் கடந்த அக்டோபர் மாதம் 22-ந்தேதி ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அவர்களது வீட்டு செப்டிக் டேங்கில் இருந்து லோகநாதன், சிந்தாமணி எலும்பு கூடுகள் எடுக்கப்பட்டது. அவர்கள் கொலை செய்து வீசப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டது . இதில் லோகநாதன், சிந்தாமணியை அவரது மகன் ஜார்ஜ்வில்லியம் கொலை செய்தது தெரியவந்தது.

இதற்கு உடந்தையாக அவரது உறவினர் ஜான்விக்டர் இருந்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் வில்லியம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :-

எனது தந்தைக்கு சரியாக கண் தெரியாது. எங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வீடு மற்றும் வங்கியில் பணம் உள்ளது. இந்த சொத்துக்களை எனது தாயார் சிந்தாமணி பெயருக்கு தந்தை எழுதி வைத்தார். அவருக்கு பிறகே சொத்துக்களை நான் பெற முடியும். உடனே பணம், சொத்துக்களை கேட்ட போது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் ஆம்பூரில் தனியாக வசித்து வந்தனர்.

கடந்த 2009-ம் ஆண்டு ஆம்பூர் வந்தேன். எனது தந்தையிடம் சொத்துக்களை கேட்டு தகராறு செய்தேன். அவர் மறுத்ததால் அவரை அடித்து உதைத்தேன். பீரோவில் மோதிய அவர் தரையில் சாய்ந்தார். இதனை எனது தாய் சிந்தாமணி பார்த்து சத்தம் போட்டார். அவரை மடக்கி பிடித்து கீழே தள்ளினேன்.

ஆத்திரத்தில் தாய்-தந்தை என்று கூட பார்க்காமல் தலையணையால் அமுக்கி துடிக்க துடிக்க கொலை செய்தேன். பின்னர் எனது உறவினர் ஜான்விக்டர் உதவியுடன் இருவரின் பிணங்களையும் செப்டிக் டேங்கில் தூக்கி போட்டோம். அவர்கள் திடீரென மாயமாகி விட்டதாக வதந்தியை பரப்பி விட்டேன். இதுபற்றி போலீசில் புகார் செய்து 2 ஆண்டுகள் நாடகமாடினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: