Sunday, July 31, 2011

நிலமோசடி பொய் புகார் அதிகரிப்பு.



இடத்திற்கு கூடுதல் பணம் பெறும் ஆசையி்ல் நில மோசடி செய்ததாக பொய் புகார்கள் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வன்முறை சம்பவங்களும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நிலங்களின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் நிலத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் விற்கப்பட்ட நிலத்தின் விலை இன்னும் பல மடங்கு அதிகரித்து விட்டதால் ஏன்தான் நிலத்தை விற்றோமோ என்ற ஏக்கத்தில் இருப்பவர்கள் பலர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு நிலமோசடி தொடர்பான புகார்களை பெறுவதற்கு மாவட்டம் தோறும் தனிப்பிரிவை அமைத்துள்ளது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன் தாங்களாகவே விரும்பி முழு சம்மத்துடன் நிலத்தை விற்றவர்கள் கூட இன்று அந்த நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டதால் விற்றவர்களிடம் இருந்து கூடுதலாக பணத்தை பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் நிலத்தை அபகரித்து விட்டதாக பொய் புகார் கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிகப்படியான பணத்திற்கு ஆசைப்பட்டும், அரசியல் விரோதத்தாலும் கொடுக்கப்படும் பொய் புகார்களால் வரும் நாட்களில் வன்முறை, மோதல், கொலை போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாய நிலை உருவாகியுள்ளதாக பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

No comments: