Thursday, April 14, 2011

சீமான் தேர்தல் பரப்புரை - சில கேள்விகள்.


ஆம்பூருக்கு வந்து சீமான் தேர்தல் பரப்புரை ஆற்றினார். மிகவும் சிறந்த உரை. நடுநிலைமையோடு அவர் ஆற்றிய உரை மக்களை மாற்று அரசியலுக்கு கொண்டு வருகின்றது. அத்தகைய அறச்சீற்றம் அவருடைய உரையில் இருந்தது.

அரசு மருத்துவமனை,அரசுபள்ளி சார்ந்த கருத்துகள் மிகவும் சரியானதாக இருந்தன. ஆனால் அவர் தவறவிடுகின்ற நுண்ணரசியல் புள்ளிகள் அவர்மீதான நம்பிக்கையின்மையினைக் கூட்டுகின்றது. மாற்று அரசியலை நிறுவ அதுவே சீமானுக்கு பெருந்தடையாக இருக்கும்.

அவரின் உரையில் எழும் சில கேள்விகள்

1. ஒரு ரூபாய் அரிசியை பகடி செய்யும் அவர் இலவச அரிசி தருவதாகச் சொன்ன இலைக்கட்சியை ஏதும் சொல்லவில்லை.

2. டாஸ்மார்க் தத்துவத்தைத் தொடங்கிவைத்த அவர் கூட்டணியின் தலைவியை மதுவிலக்குக்கு ஆதரவாக தலையைக் கூட அவரால் அசைக்க வைக்க முடியாது.

3. ராஜராஜனின் பெருமையைப் பேசும் சீமான் ராஜராஜன் ஓர் ஆரியப்பைத்தியம் பிடித்தவன் என்பதையும் அவனுடைய ஆட்சியில்தான் பார்ப்பனீயம் தமிழ்நாட்டில் ஆழ வேர்பிடித்தது என்பதனையும் அறிந்தாரா எனத் தெரியவில்லை. 400க்கும் மேற்பட்ட தமிழ்ப்பெண்களை கோயில்களில் கட்டாயப்படுத்தி தேவதாசி ஆக்கியவன் என்பதனையும் அறிந்தாரா எனத் தெரியவில்லை.

4. வட இந்தியத் தலைவர்களின் பெயர்களை தமிழர்கள் வைத்துக்கொள்கிறார்கள் என்னும் கருத்தைக் கூறுகையில் அந்தத் தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லும்போது அம்பேத்கர் பெயரையும் சொன்னார் சீமான். எத்தனை சாதி இந்துத் தமிழர்கள் அம்பேத்கர் பெரைச் சூட்டிக்கொண்டார்கள். சீர்த்திருத்த இந்துத் தமிழர்கள் கூட தங்களை குழந்தைகளுக்கு எத்தனை பேர் அம்பேத்கர் பெயரை வைத்தார்கள்?

5. சுபாஷ் சந்திரபோசை தமிழகத்தில் பரப்பிய எங்கள் அய்யா பொன் முத்துராமலிங்கத்துக்கு வடநாட்டில் ஒரு சிலை உண்டா? எனக் கேட்டார் சீமான். இதில் ஒரு குறிப்பு தெறிக்கின்றது.

அது இருக்கட்டும் அப்படித்தான் அது ( யாரையும் மாற்ற முடியாது). ஒரு தாழ்த்தப்பட்ட தமிழன் பேச்சுவார்த்தையின்போது தனக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்தான் என்பதற்காக இம்மானுவேல் சேகரனை படுகொலை செய்தாரே உங்கள் அய்யா பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர் சாதி வெறியரா? தேசபக்தரா?

பார்வர்டு பிளாக் கட்சியை ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியாக மாற்றியது யார் தோழரே?

6. புலிகளுக்கு தீவிரமான எதிர்ப்பாளர்களான மு.மு.க வேட்பாளருக்கு ஓட்டு கேட்கிறீர்களே நியாயமா? அவர்கள் உங்கள் மேடைக்கே வரவில்லை என்னும் கொள்கைக் குறிப்பை உணர்ந்தீர்களா?

பகுஜன் சமாஜ் கட்சிக்கு நீங்கள் ஓட்டு கேட்டிருக்கலாம். புலிகளைக் கொன்றதில் காங்கிரஸ் கட்சிக்கு எப்படி பங்கிருக்கின்றதோ அதைப் போலத்தான் அதை ஆதரித்தவர்களுக்கும் இருக்கும். மு.மு.க புலிகள் ஆதரவுக் கொள்கையுடையதா?

இன்னும் கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளது. ஆனாலும் 63 காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க வேண்டும் என்னும் சீமானின் உன்னத லட்சியத்தில் நாமும் மனம் கோர்க்கின்றோம் ( கை கோர்க்கின்றோம் என்று சொல்ல முடியாது)

இப்படிக்கு: Yazhan Aathi


1 comment:

மர்மயோகி said...

சீமான் என்பவன் யார்? நாலு குப்பை படம் எடுத்து விலை போகாதவன், விடுதலைப்புலிகளின் காசுக்காக இன்று தமிழ் நாட்டில் குரைத்துக்கொண்டிருக்கும் ஒரு ஏவல் நாய்..
தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்க இந்தியாவின் துரோகிகளுக்காக குரைத்துக்கொண்டிருப்பது ஏன்? இப்போது இந்த பிரச்சினை மட்டும்தான் உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறதா?
இவனும் வைக்கோலும் தீக்குளிப்பையும் தரக்கொளையையும் தூண்டிக்கொண்டிருப்பது மட்டுமின்றி, இந்தியாவுக்கு தேச துரோகம் செய்துகொண்டிரிக்கின்றார்கள்..ஜெயலலிதா வரட்டும்..முதலில் கம்பி எண்ணப்போவது இந்த தேச துரோகிகள்தான்..