பிரபல பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா. மலையாளத்தை சேர்ந்தவரான இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கும் விஜயசங்கர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது.
தற்போது அந்த குழந்தைக்கு 8 வயதாகிறது. சாய்பாபா அருளால் பிறந்த குழந்தை என்பதால் இக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா என்பதாகும்.
இந்நிலையில் துபாயில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசைநிகழச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது குழந்தையுடன் துபாய் சென்றார் சித்ரா. சித்ராவுடன் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், சாதனா சர்க்கம், நரேஷ் ஐயர், பென்னி தயால், விஜய் பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹினா உள்ளிட்ட பலர் சென்றனர். இவர்கள் அனைவரும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களை பாட இருக்கின்றனர்.

துபாயின் எமிரேட்ஸ் ஹில்ஸில் உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் திலீப் ரவுலான் என்பவர் வீட்டில் சித்ரா தனது குழந்தையுடன் தங்கியிருந்தார். சித்ராவின் மகள் நந்தனா வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.
இதனையடுத்து உடனடியாக குழந்தை நந்தனாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நந்தனா இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 15வருடமாக தவமிருந்து பெற்ற மகள் இப்போது கண்முன் இறந்து கிடப்பதை பார்த்து சித்ரா கதறி அழுதார்
சித்ராவின் மகள் மனநலம் குன்றியவர். (யாரிடமும் எளிதில் பழக முடியாத மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை)
8 comments:
மிக வேதனை!
குழந்தையின் ஆத்ம சாந்தியும்; பெற்றோரின் மன ஆறுதலுக்கும் இறைஞ்சுகிறேன்.
சித்ராவின் சிரித்த முகம் இனிக் காணமுடியாது.
விடுதி நீச்சல் குளத்தில் காவலர்களின் அவதானமில்லாமலா? விதி!
I remember, Mrs. Chitra very happy statement after she was an mother.
பிள்ளைகளை இழத்தல் என்பது பெற்றோர்களுக்கு தாங்கவொண்ண துயரத்தை தரும்.வேதனையாக உள்ளது.
இது தனிப்பட்ட வில்லா டைப் வீடு ஆனதால் டிரைனர்கள் அச்சமயங்களில் இருக்க வாய்ப்பில்லை. பொதுவான நீச்சல் குளங்களில் மட்டுமே காவலர்கள் இருப்பது வழக்கம்.
வருத்தமான செய்தி.
ஹூம்! கொடுமை.
சித்ராவின் சிரித்த முகம் நினைவில் வருகிறது.எப்பவும் சிரித்து கொண்டே இருக்கும் சித்ராவிற்கு இது பேரிடி.அவரின் மகள் ஆடிஸத்தால் பாதிக்கப்பட்டவர்.
துயரம் தரும் செய்தி இது சித்திராவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன்
வருத்தமான செய்தி. ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment