முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து, தி.மு.க., பொதுச்செயலாளர் க.அன்பழகன் தொடர்ந்த வழக்கு மீது கர்நாடக ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுவது என்பது வழக்கை தாமதப்படுத்தும் செயல். மீண்டும் விசாரிக்க கோருவது என்பது நீதிக்கு எதிரானது. வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு வேறு எந்த உத்தரவையும் பிறப்பித்து வழக்கை தாமதப்படுத்தக்கூடாது என்று கூறினார்.
No comments:
Post a Comment