அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணத்தில் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து ஜுனோ என்ற பெயரிடப்பட்ட விண்கலம் ஒன்றை வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு மேற்கொள்ள அனுப்பியுள்ளனர்.
இது மணிக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்து கோள்களின் அரசன் என்றழைக்கப்படும் வியாழனின் மையப்பகுதிக்கு சென்றடையும். பின்னர் அதன் உட்புற பகுதிகள், வியாழனின் வளிமண்டலம் மற்றும் அதன் காந்தப்புல வலிமை ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளும். இந்த ஆய்வின் தலைவர் ஸ்காட் போல்டன் கூறும் போது, சூரிய குடும்பம் உருவானது எவ்வாறு என்பது உள்பட பல ரகசியங்கள் வியாழன் கோளில் மறைந்துள்ளன. எனவே இந்த ஆராய்ச்சியின் மூலம் பல அரிய தகவல்கள் கிடைக்கப் பெறும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இந்த விண்கலத்துக்கு ஜுனோ என்று பெயரிடப்பட்டது சற்று சுவாரசியமானது. ரோம பெண் கடவுளான ஜுனோ வியாழனின் மனைவி ஆவார். இவர் வியாழனை பற்றி உளவு பார்த்ததாக கூறப்படுவதுண்டு. அதனடிப்படையில் இந்த விண்கலத்திற்கு ஜுனோ என பெயர் வைத்துள்ளனர்
No comments:
Post a Comment